
புளோரிடா, ஜூலை 25-
உலகப் புகழ்பெற்ற
பிரபல மல்யுத்த வீரர் ஹல்க் ஹோகன் (Hulk Hogan) நேற்று இரவு மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார் என்ற அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது.
1980களில் தொழில்முறை மல்யுத்தத்தின் முகமாக இருந்த ஹல்க் ஹோகன், 71 வயதில் காலமானார் என்று அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஃபுளோரிடாவில் உள்ள அவரது வீட்டில் ஹல்க் ஹோகன் காலமானதாக அவரது மேலாளர் கிறிஸ் வோலோவை மேற்கோள் காட்டி NBC செய்திகள் தெரிவித்துள்ளது.
இவரின் மறைவு செய்தி ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

