
கோலாலம்பூர், ஜூலை 25-
நாளை சனிக்கிழமை மெர்டேக்கா சதுக்கத்தில் நடைபெறவுள்ள பேரணியில் கலந்து பங்கேற்பாளர்கள் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க ரயிலில் செல்லுங்கள் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் கேட்டுக் கொண்டார்.
அனைத்துப் பொது போக்குவரத்து சேவைகளும் நாளை வழக்கம் போல் செயல்படும்.
அரசாங்கத்திற்கு எதிரான பேரணியைப் பங்கேற்பாளர்கள் அமைதியான முறையில் வழிநடத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.பேரணி நாட்டின் அமைதியைச் சீர்குலைக்கும் வண்ணம் இருக்க கூடாது என்றார் அவர்.
இதனிடையே நாளை ரயில் சேவைகள் நிறுத்தப்படவில்லை என்று கேடிஎம் ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. ரயில் நிலையங்களை மூடுவதற்கு எந்த ஒரு உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை.
நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கே.டி. எம். நிலையங்கள் மூடப்படும் என்ற செய்தி போலியானது என்று அது விளக்கம் அளித்துள்ளது.

