



மஞ்சோங், ஜுலை.28:
நமது சமயத்தை நாமே இழிவுப்படுத்தும் செயல்நடவடிக்கையால் சில தற்குறிகள் நமது சமயத்திலிருந்து மதம் மாற்றம் செய்துக் கொண்ட பிறகு இழிவுப்படுத்தும் சம்பவத்திற்கு தூண்டுதலாக அமைகிறது நமது திருவிழா அலங்கோலங்கள் என்று மஞ்சோங் இந்து சங்கம் வட்டாரப் பேரவையின் 47 வது திருமுறை ஓதும் விழாவை தொடக்கி வைத்தபோது புருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினரின் இந்திய நலப்பிரிவு சிறப்பு அதிகாரி் திருமுறை செம்மல் தினகரன் கோவிந்தசாமி கூறினார்.
இந்த மாவட்டத்தில் வன்செயல் நடவடிக்கைகள் தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது.
இவ்விவகாரத்திற்கு தீர்வு காணும் பொருட்டு வட்டார இந்து சங்க பேரவையும் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
குறிப்பாக, மாவட்ட போலீஸ் படை தலைவருடனான சந்திப்பை விரைவில் ஏற்பாடு செய்யப்போவதாக அவர் குறிப்பிட்டார்.
இன்று இங்கு வர்ணம் தீட்டும் போட்டி, திருமுறை ஓதுதல், கோலப் போட்டி, பேச்சுப்போட்டி, பதிகப்பாராயணம் ஒப்புவித்தல் போன்ற போட்டிகள் சிறப்பாக நடந்தேறின.
இதன் வாயிலாக இப்போட்டிகளில் வெற்றி பெறும் இருவர் நம் மாநிலத்தை பிரதிநிதித்து தேசிய அளவில் போட்டியிடுவது பாராட்டப்பட வேண்டிய விசயமாகும் என்று அவர் பாராட்டினார்.
இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற புருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஙே கூ ஹாம் 7 ஆயிரம் ரிங்கிட் நிதியுதவி வழங்குவதாக வாக்குறுதி அளித்ததாக அவரின் இந்திய சமூகநல அதிகாரி தினகரன் கூறினார்.
இவ்வாண்டு இங்கு நடைபெறும் போட்டியில் மஞ்சோங் மாவட்ட தமிழ்ப்பள்ளிகள் அனைத்தும்
முழுமையான ஈடுபாட்டை காண்பித்துள்ளனர்.
குறிப்பாக, மாணவர்கள் , ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் என்ற அடிப்படையில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்து சமூகத்தினர் கலந்துக்கொண்டதாக மஞ்சோங் இந்து சங்கத்தின் வட்டாரத்தலைவர் இந்திராணி இராமன் கூறினார்.
அதுமட்டுமின்றி, இங்குள்ள அஸ்தாக்கா சட்டமன்ற உறுப்பினர் 2 ஆயிரம் ரிங்கிட் வழங்கி உதவினார்.
அவருடன் இம்மாவட்ட பிரமுகர்கள், வணிகர்கள், நன்கொடையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தங்களால் இயன்ற நிதியுதவி் வழங்கி இந்நிகழ்வின் வெற்றிக்கு உறுதுணையாக செயல்பட்டதற்கு பாராட்டை தெரிவித்தார்
இம்மாவட்ட இந்து சங்க துணைத் தலைவர் மொ.சண்முகம்.

