
சுங்கைபட்டாணி, ஆக1-
தாய்லாந்து மற்றும் கம்போடியா நாட்டில் நிகழவிருந்த போர் பதற்றத்தை ,சமரசப் பேச்சின் மூலம் நமது நாட்டின் பிரதமரும் தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு தலைவருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இருநாட்டு பிரதமர்களையும் அழைத்து சுமூகமான பேச்சு வார்த்தை நடத்தினார்.
இச் சமபவத்தை பாசீர் மாஸ் நாடாளுமன்ற உறுப்பினரும் பாஸ்கட்சியின் இளைஞர் பகுதித் தலைவருமான அகமாட் ஃபாசில் சஹாரி பிரதமரின் இந்த சமரசமான நடவடிக்கையினை நையாண்டி செய்துள்ளார்.
ஓர் செம்மறி ஆட்டிற்கும்,ஆட்டிற்கும் இடையே நிலவும் வாழைப்பழப் பிரச்சனையினை தீர்ப்பதற்கு இடைத்தரகாக அங்கு குரங்கு தேவையில்லை போன்ற கேலிச்சித்திரத்தை தனது வலைத்தளத்தில் பதிவுட்டுள்ளார்.
அவரின் இந்த விமர்சனம் மூன்று நாட்டு பிரதமர்களையும் அவமதிப்பதாகும் என
மெர்போக் பிகேஆர் தொகுதித் துணைத்தலைர் எஸ்.ஜோவேல், தொகுதியின் உதவித் தலைவர் காரிசால், விஜய் கோபால், ஃபிடாவுஸ் மற்றும் அத்தொகுதியைச் சேர்ந்தவர்கள் கோலமூடா மாவட்ட போலீஸ் நிலயத்தில் புகார் செய்துள்ளனர்.

