
சுங்கை சிப்புட், ஆகஸ்ட் 3
மஇகா கட்சியை விமர்சித்து பேசிய துளசி மனோகரனை கடுமையாக எதிர்க்கும் வகையில் எஸ்.எஸ். இராமமூர்த்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
“எங்கள் தாய் கட்சி மஇகாவை விமர்சிப்பதற்குத் துளசி மனோகரனுக்கு இன்னும் போதுமான பக்குவமே இல்லை. அரசியல் அனுபவத்திலும் வயது மூப்பிலும் இன்னும் குழந்தையாகவே இருக்கிறாள். பெயர் மட்டும் துளசி; உண்மையில், நீ தூசிதான்,” என்று அவர் சுட்டிக்காட்டினார்.
துளசி அளித்த ஒரு அறிக்கையை சாடிய அவர், “நானும் போலீஸ் ஸ்டேஷன் போறேன்” என வடிவேல் காமெடி போன்று பேசி, இந்தியர்களின் மனதை வேதனைப்படுத்தும் நிலைக்கு போக வேண்டாம்,” என எச்சரித்தார்.
துளசி மனோகரன் தன்னுடைய தொகுதியான பேராக் புந்தோங்கில் மக்களுக்கு சேவை செய்ய தயாராக இருக்க வேண்டும் என்றும், கட்சி பற்றிய விமர்சனங்களில் ஈடுபட வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
“அண்ணார்ந்து படுத்துக்கிட்டு காரித்துப்பினது போலத்தான் மஇகாவைப் பற்றி பேசியிருக்கிறாள். அரசியல் கத்துக்குட்டியாக இருக்கிற துளசிக்கு எதையும் சொல்லித் தர தேவையில்லை. இந்தியர்களின் பிரச்சனைகள் எழும்பியபோது மௌனமாக இருந்த துளசி, இப்போது புற்றிலிருந்து வெளியே வந்த குழந்தை போல் பேசுகிறாள்,” என்றார் எஸ்.எஸ். இராமமூர்த்தி.

