
கோலாலம்பூர் ஆக 6- மலேசிய சிலம்பம் சங்கத்தைச் சேர்ந்த நாங்கள், சிலாங்கூர் சுக்மா 2026 விளையாட்டு நிகழ்விலிருந்து சிலம்பத்தை விலக்க சுக்மா உயர் கவுன்சில் குழுவின் முடிவால் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளோம் என்று மலேசிய சிலம்ப கழகத்தின் தலைவர் டாக்டர் சுரேஸ் தெரிவித்தார்.
தன்னிச்சையான இந்த முடிவு, விளையாட்டுத் திறன் மற்றும் நியாயத்தின் உணர்வை குறைத்து மதிப்பிடுகிறது. சிலம்பம் என்பது அங்கீகாரம் மற்றும் ஆதரவுக்கு தகுதியான ஒரு பாரம்பரிய தமிழர்களின் தற்காப்புக் கலை.
மேலும் இந்த அநீதியான முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு சுக்மா உயர் கவுன்சில் குழுவை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
எங்கள் சமூகத்தில் கலாச்சார பன்முகத்தன்மை மற்றும் தடகள சிறப்பை மேம்படுத்துவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
இந்த விவகாரத்தை இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் மற்றும் தேசிய விளையாட்டு கவுன்சிலிடம் உரிய பரிசீலனைக்கு கொண்டு செல்வதை நாங்கள் நிறுத்த மாட்டோம் என்று டாக்டர் சுரேஸ் தெரிவித்தார்

