
கோலாலம்பூர் ஆக 6-
சிலாங்கூர் மாநில பிபிபி கட்சியின் மாநாடு வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி Klang Executive Club மண்டபத்தில் பிற்பகல் 2.00 மணிக்கு மேல் மிகப்பெரிய அளவில் நடைபெறுகிறது என்று சிலாங்கூர் மாநில பிபிபி கட்சியின் தலைவர் டாக்டர் சுரேந்திரன் தெரிவித்தார்.
பிபிபி கட்சியின் தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டை சிலாங்கூர் மாநில தேசிய முன்னணி தலைவர் DATUK Wira HJ Megat Zulkarnian Tansri Omardin அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைக்கிறார்.
குறிப்பிட்ட நேரத்தில் மாநாடு தொடங்குவதால் சிலாங்கூர் மாநில பிபிபி கட்சியின் உறுப்பினர்கள் வந்து விட வேண்டும்.
சிலாங்கூர் மாநில பிபிபி கட்சியின் மாநாடு புதிய வரலாற்றை படைக்கும் என்று எதிர்பார்ப்பதாக டாக்டர் சுரேந்திரன் நம்பிக்கை தெரிவித்தார்.

