2026 சிலாங்கூர் சுக்மா போட்டியில் சிலம்பத்தை கண்டிப்பாக இடம் பெற செய்யுங்கள்! டாக்டர் சுரேஸ் வலியுறுத்து

காளிதாஸ் சுப்ரமணியம்

கோலாலம்பூர், ஆக 7-
தமிழர்களின் பாரம்பரிய தற்காப்பு கலையாக விளங்கும் சிலம்பம்
வரும் 2026 சிலாங்கூர் சுக்மா போட்டியில் கண்டிப்பாக இடம் பெற செய்யுங்கள் என்று மலேசிய சிலம்ப கழகத்தின் தலைவர் டாக்டர் சுரேஸ் வேண்டுகோள் முன் வைத்துள்ளார்.

சிலாங்கூர் சுக்மா போட்டிக்காக சிலம்பம் நடத்துவதற்கு ஏதுவாக பட்ஜெட் தொகை பற்றியும் நாங்கள் தெரிவித்தோம்.

போட்டிக்கான அரங்கமும் தேர்வு செய்யப்பட்டது.

சுக்மா போட்டியில் பங்கேற்கும் வகையில் 2,000 சிலம்ப விளையாட்டாளர்கள் தயார் நிலையில் இருக்கிறார்கள்.

எல்லா ஏற்பாடுகளும் முறையே செய்யப்பட்ட வேளையில் இப்போது திடீரென சுக்மா போட்டியில் சிலம்பத்தை நீக்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று அவர் சொன்னார்.

சிலாங்கூர் சுக்மா போட்டியில் சிலம்பம் இடம் பெறும். கவலைப்படா தீர்கள் என்று இளைஞர் விளையாட்டு துறை அமைச்சின் அதிகாரிகள் வாக்குறுதி அளித்தனர்.

ஆனால் திடீரென்று சுக்மாவில் சிலம்பத்தை கழற்றி விட்டது ஏன் அதிர்ச்சியாக உள்ளது.

சிலாங்கூர் சுக்மா போட்டிக்கு தயாராகி கொண்டிருக்கும் விளையாட்டாளர் கள் இப்போது பெரும் ஏமாற்றத்தை அடைந்துள்ளனர்.

கடந்த ஆண்டு சரவாக் மாநிலத்தில் நடைபெற்ற சுக்மா சிலம்பப் போட்டியில் சரவாக், சபா உட்பட 14 மாநில விளையாட்டாளர் கள் பங்கேற்றனர்.

மொத்தம் 14 தங்கம் 14 வெள்ளி மற்றும் 28 வெண்கலம் சரவாக் சுக்மா போட்டிக்கு ஒதுக்கப்பட்டது.

ஆகவே இளைஞர் விளையாட்டு துறை அமைச்சு மற்றும் சிலாங்கூர் சுக்மா உயர் கவுன்சில் குழு மறுபரீலனை செய்து சிலம்பத்தை கண்டிப்பாக இடம் பெற செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles