சிலாங்கூர் சுக்மாவில் சிலம்பம் இடம் பெற இந்திய எம்.பி.க்கள் குரல் கொடுக்க வேண்டும்! டாக்டர் சுரேஸ் வேண்டுகோள்

காளிதாஸ் சுப்ரமணியம்
மா.பவளச்செல்வன்

கோலாலம்பூர் ஆக 7-

வரும் 2026 சிலாங்கூர் சுக்மா போட்டியில் சிலம்பத்தை இடம் பெற செய்ய இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுக்க வேண்டும் என்று மலேசிய சிலம்ப கழகத்தின் தலைவர் டாக்டர் சுரேஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

டிஜிட்டல் துறை அமைச்சர் மற்றும் டமான்சாரா நாடாளுமன்ற உறுப்பினர் கோபிந்த் சிங் டியோ எங்களுக்காக குரல் கொடுப்பார் என்று நம்புகிறேன்.

பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன், கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராவ், சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர் யூனிஸ்வரன், ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ராயர், புக்கிட் குளுக்கோர் நாடாளுமன்ற உறுப்பினர் ராம் கர்ப்பால் சிங், சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் கேசவன், சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ இரமணன், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ சரவணன், ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் குலசேகரன் ஆகியோர் குரல் கொடுப்பார்கள் என்று நம்புகிறேன் என்றார் அவர்.

பல ஆண்டுகளுக்கு பிறகு 2024 சரவாக் சுக்மா போட்டியில் சிலம்பம் இடம் பெற்றது.

ஆனால் 2026 சிலாங்கூர் சுக்மா போட்டியில் சிலம்பத்தை நீக்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆகவே தமிழர்களின் பாரம்பரிய தற்காப்பு கலையாக விளங்கும் சிலம்பம் மீண்டும் சுக்மாவில் இடம் பெற இந்திய எம்பி க்கள் போராட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

இன்று ஜாலான் ஈப்போ மெட்ராஸ் காபே உணவகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles