

மஞ்சோங், ஆக.7: இங்குள்ள மஞ்சோங் மாவட்டத்திலுள்ள தேசியப்பள்ளி, சீனம் மற்றும் தமிழ்ப்பள்ளிகளுக்கிடையிலான சதுரங்கம் போட்டி வரும் 10.8.2025( ஞாயிற்றுக்கிழமை) காலை மணி 8.00 முதல் மாலை மணி 5.00 வரை ஆயர் தாவார் தமிழ்ப்பள்ளி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இப்போட்டி 7, 8,10 மற்றும் 12 வயதிற்குட்பட்ட பிரிவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் 1 முதல் 10 வரை வெற்றி பெறும் மாணவர்களுக்கு வெற்றிக்கிண்ணம் மற்றும் சான்றிதழ் பரிசாக வழங்கப்படும்.
இதுவரை சுமார் 210 மாணவர்கள் பங்கு பெறுவதாக பதிவு செய்துள்ளனர். இவர்களில் மஞ்சோங் மாவட்டத்தை தவிர்த்து இதர மாவட்டங்களிலிருந்தும் மாணவர்கள் கலந்துக்கொள்ளவுள்ளனர்.
மேலும் சிறந்த வெற்றியாளர்களுக்கு சிறப்பு விருதும் வழங்கப்படவுள்ளது. இப்போட்டி பற்றிய மேலும் தகவல்கள் பெற எண்ணுவோர் கீழ் குறிப்பிட்ட எண்ணுடன் தொடர்புக்கொள்ளவும்.( 016-5991424; 012-5822591).

