


சுங்கை பூலோ, ஆக 10-
சுங்கை பூலோ வட்டாரத்தில் அருள் பாலித்துக் கொண்டிருக்கும் தேவிஸ்ரீ இராஜ மாரியம்மன் ஆலய 29 ஆம் ஆண்டு வருடாந்திர திருவிழா இன்று மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
சுங்கை பூலோ தேவிஸ்ரீ இராஜ மாரியம்மன் ஆலயத் தலைவர் டத்தோ மூர்த்தி, செயலாளர் பாலன், செயலவை உறுப்பினர் ரவி உட்பட இளைஞர் படையினர் ஆலயத் திருவிழாவை வெற்றிகரமாக நடத்தினர்.
நேற்று சனிக்கிழமை இரவு நடைபெற்ற சிறப்பு பூசையில் ம இகா தேசிய துணை தலைவர் டத்தோஸ்ரீ எம் சரவணன் கலந்து சிறப்பித்தார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆலய திருவிழாவில்
ம இகா முன்னாள் தேசிய உதவித் தலைவர் டான்ஸ்ரீ வீரசிங்கம்,
சிலாங்கூர் மாநில முன்னாள் காவல் துறை துணை தலைவர் டத்தோ சசிகலா,
சிலாங்கூர் மாநில காவல் துறை அதிகாரி ஏசிபி துவான் சோமு, செலாயாங் பசார் பூரோங் இந்திய காய்கறிகள் விற்பனை சங்கத்தின் தலைவர் டாக்டர் மணிச்செல்வன் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.
காலையில் சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் பக்தர்கள் பால்குடங்கள் ஏந்தி அம்மனுக்கு காணிக்கை செலுத்தினர்.
பிற்பகல் 12.30 மணிக்கு மேல் நடைபெற்ற மகேஸ்வர பூஜையைத் தொடர்ந்து பக்தர்களுக்கு சுவையான அன்னதானம் பரிமாறப்பட்டது.
சிறப்பு வருகை புரிந்த முக்கிய பிரமுகர்களுக்கு ஆலயத் தலைவர் டத்தோ மூர்த்தி, செயலாளர் பாலன் ஆகியோர் பொன்னாடை போர்த்தி மாலைகள் அணிவித்து சிறப்பு செய்தனர்.
கடந்த காலங்களை போல் இவ்வாண்டும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்றார் அவர்.

