டத்தோ டாக்டர் லோகபாலா தலைமையில் பிபிபி கட்சி சரியான பாதையில் வெற்றி நடை போடுகிறது! டாக்டர் சுரேந்திரன் பெருமிதம்

கிள்ளான் ஆக 10-
டத்தோ டாக்டர் லோகபாலா தலைமையில் இன்று பிபிபி கட்சி சரியான பாதையில் வெற்றி நடை போடுவது மகிழ்ச்சி அளிக்கிறது என்று சிலாங்கூர் மாநில பிபிபி கட்சியின் தலைவர் டாக்டர் சுரேந்திரன் தெரிவித்தார்.

இன்று ஏராளமான உறுப்பினர்கள் பிபிபி கட்சியில் இணைந்து வருகின்றனர்.

இது எதை காட்டுகிறது என்றால் பிபிபி கட்சியின் மீது மக்கள் நம்பிக்கையை உணர்த்துகிறது என்றார்.

சிலாங்கூர் மாநிலத்தில் 12 மாவட்டங்களில் 440 கிளைகள் பிபிபி உள்ளன.

மக்கள் பிரச்சனைகளுக்கு முன்னுரிமை கொடுத்து பிபிபி கட்சி செயலாற்றி வருகிறது.

அந்த வகையில் சிலாங்கூர் மாநில பிபிபி கட்சி தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் களத்தில் இறங்கி தீவிரமாக சேவையாற்றிட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

இன்று Klang Executive Club இல் சிலாங்கூர் மாநில பிபிபி கட்சியின் ஆண்டு கூட்டத்தில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles