தோட்டப் பாட்டாளிகளுக்கு வீட்டுடைமை திட்டத்திற்கு நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்போம்! கேசவன் – யூனிஸ் வரன் அறிவிப்பு

கோலாலம்பூர் ஆக 13-
இந்நாட்டில் உள்ள தோட்டப் பாட்டாளிகளுக்கு வீட்டுடைமை திட்டத்திற்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்போம் என்று சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் கேசவன் மற்றும் சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர் யூனிஸ் வரன் தெரிவித்தனர்.

நாங்களும் தோட்டப் பாட்டாளிகள் பிள்ளைகள்.

தோட்டப் பாட்டாளிகளின் கஷ்டம் மற்றும் வேதனை என்ன என்பது எங்களுக்குத் தெரியும்.

தோட்டப் பாட்டாளிகளுக்கு வீட்டுடைமை திட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்று தோட்டப் பாட்டாளிகளில் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.

இவர்களுக்கு ஆதரவாக நாங்கள் இருப்போம்.

இப்போது நடைபெற்று வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் இது தொடர்பாக குரல் கொடுப்போம் என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

இன்று நாடாளுமன்ற வளாகத்தில் அணி திரண்ட தோட்டப் பாட்டாளிகள் வீட்டு மை திட்டம் சட்ட மகஜரை சமர்ப்பித்தனர்.

பிஎஸ்எம் கட்சி தலைவர் டாக்டர் ஜெயகுமார், துணை தலைவர் அருட்செல்வம் ஆகியோர் தலைமையில் தோட்டப் பாட்டாளிகள் ஒன்று திரண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles