
கோலாலம்பூர்:
தனது 12 வயது மகன் தாக்கப்பட்ட பிறகு, தனது மனைவிக்கு மிரட்டல் செய்திகள் அனுப்பப்பட்டதாக முன்னாள் பொருளாதார அமைச்சர் டத்தோஸ்ரீ ரபிசி ரம்லி இன்று தெரிவித்தார்.
எனது மகனுக்கும் எய்ட்ஸ் தொற்று ஏற்படும் என்று மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. வாயை மூடு, நீ தொடர்ந்தால் உனக்கு எய்ட்ஸ் வரும் என்று அந்த செய்தியில் எழுதப்பட்டிருந்தது.
இன்று நாடாளுமன்றத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பாண்டான் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் இதனைத் தெரிவித்தார்.
நேற்று, புத்ராஜெயாவில் உள்ள ஒரு பேரங்காடியில் தனது மகன் காரில் ஏறும் போது, அடையாளம் தெரியாத ஒரு நபர் தனது மகனை இழுத்து ஹைப்போடெர்மிக் ஊசியால் குத்தியதாக ரபிசி தெரிவித்தார்.