
கோலாலம்பூர்: ஆக 14-
ஷாரா மரண வழக்கில் விசாரணை அதிகாரி நடைமுறைகளைப் பின்பற்றத் தவறிவிட்டார் என்று
புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குநர் டத்தோ எம். குமார் கூறினார்.
ஷாரா கைரினா மகாதீரின் மரண வழக்கின் விசாரணை அதிகாரி, மாணவியின் உடலை பிரேத பரிசோதனை செய்யக் கோரவில்லை.
இதன் மூலம் அவர் சரியான நடைமுறைகளைப் பின்பற்றவில்லை என்பது தெரிகிறது. 13 வயதான ஷாராவின் மரணம் சந்தேகத்திற்குரியது. மேலும் பிரேத பரிசோதனை தேவை.
ஷாராவின் தாயார் பிரேத பரிசோதனை செய்ய வேண்டாம் என்ற உறுதி மொழியில் கையெழுத்திட்டாலும், விசாரணை அதிகாரி அதைச் செயல்படுத்த விண்ணப்பித்திருக்க வேண்டும் என்று அவர் புக்கிட் அமானில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.
bernama