சமூகத்திற்கும் அரசாங்கத்திற்கும் இடையே உறவு பாலமாக தமிழ் ஊடகவியலாளர்கள் விளங்குகிறார்கள்! துணை அமைச்சர் தியோ நிக் சிங் பெருமிதம்

காளிதாஸ் சுப்ரமணியம்

கோலாலம்பூர் ஆக 16-
சமுகத்திற்கும் அரசுக்கும் இடையே உறவு பாலமாக தமிழ் ஊடகவியலாளர்கள் விளங்குகிறார்கள் என்று தகவல் தொடர்பு துறை துணை அமைச்சர் தியோ நிக் சிங் இன்று தெரிவித்தார்.

மக்களின் பிரச்சினைகளை அரசிடம் கொண்டு சேர்க்கும் குரலாக தமிழ் ஊடகவியலாளர்கள் திகழ்கின்றனர்.

செய்திகளை துல்லிதமாகவும், உடனுக்குடனும் மக்களிடம் கொண்டு சேர்ப்பது ஊடகவியாளர்களின் தலையாய கடமை.

இதைத் தவிர்த்து, மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளை அரசாங்கம் உள்பட சம்பந்தப்பட்ட தரப்பினரின் கவனத்திற்குக் கொண்டு செல்வதில் அவர்களின் குரலாகவும் திகழ்கின்றனர் ன்று தியோ நீ சிங் தெரிவித்தார்.

இதன் வழி சமூகத்திற்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான பாலமாகவும் ஊடகவியலாளர்கள் விளங்குகின்றனர் என்றார்.

செய்தியாளர் பணி என்பது சவால்மிக்கது. போலியான தகவல்கள் மலிந்து கிடங்கும் தற்போதைய உலகில் ஒரு செய்தியை உடனடியாகவும் துல்லிதமாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பது சுலபமான பணி கிடையாது என்று தலைநகர், ஜாலான் ஈப்போவில் அமைந்துள்ள விஸ்மா ஜெயபக்தி மண்டபத்தில் மலேசிய தமிழ்ப்பத்திரிகையாளர் சங்கத்தின் 8ஆம் ஆண்டு பொதுக் கூட்டத்தைத் தொடக்கி வைத்து உரையாற்றுகையில் குறிப்பிட்டார்.

தகவலறிந்த மற்றும் போட்டியாற்றல்மிக்க மக்களை உருவாக்குவதிலும் சமூகத்தில் சுபீட்சத்தை வலுப்படுத்துவதிலும் செ.வே.முத்தமிழ் மன்னன் தலைமையிலான மலேசிய தமிழ்ப்பத்திரிகையாளர் சங்கம் ஆற்றி வரும் அளப்பரிய பங்கை துணையமைச்சர் வெகுவாகப் பாராட்டினார்.

தற்போது போலி செய்திகள் வெகு விரைவில் பரவுகின்றன. பல்வேறு இலக்கவியல் தளங்களில் இவை பகிரப்படும்போது மக்கள் இவற்றை எளிதாக நம்பிவிடுகின்றனர். இது கவலை அளிக்கிறது என்றார் துணையமைச்சர்.

கடந்த 2023 ஆம் ஆண்டில் மலேசிய தொடர்பு பல்லூடக ஆணையம் (எம்சிஎம்சி)5,367 போலி செய்திகளை அகற்றிவிட்டது. இவ்வெண்ணிக்கை 2024 ஆம் ஆண்டு 17,245 என மூன்று மடங்காக அதிகரித்தது.

கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி 16,110 போலி செய்திகள் கண்டுபிடிக்கப்பட்டன.
இப்போது செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி காணொளி மற்றும் போலியான குரலில் பேசி பேர்வழிகள் மக்களை ஏமாற்றி வருகின்றனர். ஆகையால், எந்தவொரு தகவலையும் அதன் உண்மை நிலை தெரியும் வரை மற்றவர்களுக்குப் பகிர்வதைத் தவிர்க்கும்படி துணையமைச்சர் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles