
சிமிலிங், அக்18-
கல்வி, ஆராய்ச்சி மற்றும் சமூக சேவையில் 24 ஆண்டுகால சிறப்பினை முன்னிறுத்தும் விதமாக “24 மணி நேர சிறப்புகள்”எனும் நிகழ்ச்சியை தொடர்ந்து 24 மணிநேரம் நேரலையாக ஒளிபரப்பி ,
மலேசியா சாதனைப் புத்தகத்தில் (Malaysia Book of Records) ஏய்ம்ஸ்ட் பல்கலைகழகம் இடம் பிடித்துள்ளது.
நேற்று முன் தினம் பிபரபல யூபிடியூப் அலைவரிசை முகநூல் , இன்ஸ்டாகிராம் மற்றும் டிக்டோக் வலைத்தளங்களின் மூலம் ஒரே நேரத்தில் ஆகஸ்ட் 16 -ம்திகதி காலை 8.00 மணிக்கு தொடங்கப்பட்டு , மறுநாள் 17-ம் திகதி காலை 8.00 மணிக்கு நிறைவுப்பெற்றதாக அப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியான பேராசிரியர் டாக்டர் எஸ்.கதிரேசன் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

மலேசிய சாதனை புத்தக அதிகாரிகள் இந்த நிகழ்வை நேரிடையாக கண்காணித்து, அதன் சாதனையை உறுதிப்படுத்தினர்.“இது ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்திற்கான வரலாற்று சிறப்புமிக்க தருணம். ‘24 மணி நேர சிறப்புகள்’ நிகழ்ச்சி எங்கள் சாதனைகளை மட்டுமல்லாது, மாணவர்கள் மற்றும்
பணியாளர்களின் ஒற்றுமை, படைப்பாற்றல் மற்றும் தன்னம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. இந்த சாதனையைப் படைத்ததில் பெருமை கொள்கிறோம்.”
இதுவரை எந்தப் பல்கலைக்கழகமும் கல்லூரிகளும் இதுபோன்று செய்ததில்லை.இதில் மக்களுக்கு தெளிவாக புரியும் விகிதத்தில் துல்லியமாக ஒளிப்பரப்பபட்டிருப்பதாக டாக்டர் கதிரேசன் கூறினார்.
இந்தப் பல்கலைக்கழத்தில் என்ன மாதிரியான பாடத்திட்டங்கள்,நிகழ்வுகள்,திறமை வாய்ந்தவர்களை கொண்டு நிகழ்த்தப்பட்டு வருகின்றன என்பதை குறித்து ஒவ்வொரு 24மணி நேரத்தில் மக்களுக்கு தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.
எஸ்.பி.எம் கல்வியினை முடித்தவுடன் மாணவர்கள் மருத்துவராக போகிறேன்,மருந்துகத் துறையில் பயிலப்போகிறேன் என்பவரகள் முதலில் இங்கு வந்து தெளிவாகப் புரிந்துக்கொண்டு அதற்கு பிறகு அவர்கள் தொடர நினைக்கும் கல்வியினை மேற்கொள்வது சிறப்பாகும்
ஒவ்வொரு துறையைச் சேர்ந்த பேராசிரியர்களை வரவழைத்து எந்த மாதிரியான பாடங்கள் இங்கு கற்றுகொடுக்கப்படுகின்ற என்பதனையும் கல்வி எப்படி மாணவர்களிடம் சேர்க்கபடுகின்றது இங்கு தெளிவாக விளக்க்கப்படுகிறது.

5வருடங்களுக்கு முன்பு சொல்லிக் கொடுத்த பாடங்கள்போல் இப்போது சொல்லித்தரமுடியாது. அது பின் தங்கப்பட்டிருப்பதாகக் கூறினார்.இப்போது செயற்கை நுண்ணறிவு(ஏ ஐ) பாடத்திட்டங்கள் வந்தாகிவிட்டது.அதன் காரணமாக ஏராளமான மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.கடந்த கால 5 வருஷம் பாடங்கள் சரியான முறையில் இப்போது இருப்பதற்கும் வாய்ப்பு இல்லை.
அதன் காரணமாக என்ன என்ன மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன குறித்த தகவல்களை இந்த ஒலிபரபரப்பின் மூலம் விளக்கப்பட்டிருபதாக அப்பல்கலைக்கழத்தைச் சேர்ந்த டாக்டர் அலிகான் கூறினார்.
இந்த நிகழ்வில்ஆராய்ச்சி புதுமைகள் – ஆராய்ச்சி மேலாண்மை மையம்,அறிவியல் மற்றும் மேன்மை, மருத்துவ பீடம், மருந்தியல் மேம்பாடு – மருந்தியல் பீடம் பல் மருத்துவ பீடம்,உடற்பயிற்சி மற்றும் செவிலியர் துறை, அடுத்த தலைமுறை பொறியாளர்கள் – பொறியியல் கணினி தொழில்நுட்ப பீடம்,பயன்பாட்டு அறிவியல் பீடம் பண்பாட்டு இரவுகள் – இந்திய பாரம்பரிய விழா, மொழி மற்றும் கலாச்சார இரவு மாணவர் சாதனை காட்சிகள் மற்றும் வளாக சுற்றுப்பயணம், உடல் ஆரோக்கிய நிகழ்ச்சிகள் – யோகா, ஏரோபிக்ஸ் மற்றும் உடற்பயிற்சிபோன்ற அம்சங்கள் இதில் இடம் பிடித்துள்ளன.இந்த 24 மணி நேர நிகழ்ச்சியை பல்வேறு தொகுப்பாளர்கள் குழுக்களால் மாறிமாறி
நடத்தப்பட்டு, உயர்தர தொழில் நுட்பக் குழுவினரால் தடையின்றி ஒளிபரப்பப்பட்டததாக கதிரேசன் கூறினார்.
ஏய்ன்ஸ்ட் பல்கலைக்கழகத்தின் வேந்தரும்,மஇகா கட்சியின் தேசியத் தலவரும்,எம். ஐ.டி தலைவருமான தான்ஶ்ரீ டத்தோ டாக்டர் எஸ்.ஏ. விக்னேஸ்வரன் அவர்கள் காட்டிய வழிகாட்டுதுல் மற்றும் உறுதியான ஆதரவின் வழி இச்சதனையை நிகழ்த்த முடிந்ததாக கூறிய டாக்டர் கதிரேசன்
அவர்களுக்கு தனது ஆழ்ந்த நன்றி தெரிவித்துக் கொண்டு இந்த சாதனை, ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம் முன்னேற்றமான சுகாதாரக் கல்வி, டிஜிட்டல் புதுமை மற்றும் மாணவர் ஈடுபாட்டில் முன்னோடியாக இருப்பதை வலியுறுத்துகிறது என்றார்.

