Tabung Kasih@ Hawana கீழ் 478 பத்திரிகை பணியாளர்களுக்கு 13 லட்சம் வெள்ளி நிதியுதவி – தியோ நிக் சிங் அறிவிப்பு

கோலாலம்பூர் ஆக 17-
நாடு முழுவதும் மொத்தம் 478 ஊடக பயிற்சியாளர்கள் 2023 முதல் Tabung kasih hawana திட்டத்தின் கீழ் நன்மைகளைப் பெற்றுள்ளனர். இவர்களுக்கு மொத்தம் RM1.3 மில்லியன் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது என்று தகவல் தொடர்பு துறை துணை அமைச்சர் தியோ நீ சிங் தெரிவித்தார்.

மொத்தம் 478 பெறுநர்களில் 35 பேர் தமிழ் ஊடக பயிற்சியாளர்கள் என்று துணை அமைச்சர் தியோ நீ சிங் கூறினார்.

பத்திரிகையாளர்களின் சேவைகளையும் சமூகத்திற்கும் நாட்டிற்கும் அவர்கள் செய்யும் பங்களிப்புகளையும் பாராட்ட மடானி அரசாங்கத்தின் உறுதிமொழியாக இந்த முயற்சி உள்ளது என்று அவர் கூறினார்.

“எனவே உதவி தேவைப்படும் ஊடக நண்பர்களுக்கு, அல்லது அது தேவைப்படும் ஒருவரை அறிந்தவர்களுக்கு, நீங்கள் தாபோங் காசே@ஹவானாவின் செயலகம் மூலமாகவோ அல்லது எங்கள் அலுவலகத்தை நேரடியாகத் தொடர்பு கொள்ள ஒரு விண்ணப்பத்தை அனுப்பலாம்.

இல்லையெனில் எங்கள் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளவும்.
“இந்த நிதி, இனம் அல்லது மொழி வேறுபாடின்றி, முன்னாள் ஊடகவியலாளர்கள் உட்பட அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் திறந்திருக்கும்.

நீங்கள் உண்மையிலேயே தகுதியானவராகவும் தேவைப்படுபவராகவும் இருந்தால், நாங்கள் உதவி வழங்கத் தயாராக இருக்கிறோம் என்று அவர் கூறினார்.

தலைநகரில் 2025 ஆம் ஆண்டுக்கான மலேசிய தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத்தின் 8 ஆம் ஆண்டு கூட்டத்தை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்த போது அவர் இதனைத் தெரிவித்தார்.

2023 ஆம் ஆண்டு தேசிய பத்திரிகையாளர்கள் தின (HAWANA) கொண்டாட்டத்துடன் இணைந்து தொடங்கப்பட்ட Kasih@HAWANA நிதி, நிதி உதவி, மருத்துவச் செலவுகள், குடும்ப நலன் மற்றும் பொருத்தமான ஆதரவு உட்பட, ஊடகவியலாளர்கள் மற்றும் தேவைப்படும் முன்னாள் ஊடகவியலாளர்களின் நலனுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

புதிதாக அங்கீகரிக்கப்பட்ட மலேசிய ஊடக கவுன்சில் (MMM) அதன் முதல் வருடாந்திர பொதுக் கூட்டத்தை நவம்பர் மாதம் கோலாலம்பூரில் நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அவர் அறிவித்தார்.

ஊடகத் துறையில் உள்ள பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்காக இந்தக் கூட்டம் நடைபெற்றது.

“மலேசிய ஊடக கவுன்சில் இனம், மதம் அல்லது மொழி ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் அனைத்து ஊடக வல்லுநர்களுடனும் தொடர்ந்து ஈடுபாட்டு அமர்வுகளை நடத்தும். இது முக்கியமானது.

ஏனெனில் மலேசியாவின் தனித்துவம் அச்சிடப்பட்ட செய்தித்தாள்கள், ஆன்லைன் போர்டல்கள் முதல் மலாய், ஆங்கிலம், தமிழ் மற்றும் சீனம் உள்ளிட்ட பன்மொழி ஊடகங்கள் வரை அதன் ஊடக பன்முகத்தன்மையில் உள்ளது,” என்று அவர் கூறினார்.

MMC அனைத்து பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக அமைப்புகளுக்கும் உறுப்பினர் உரிமையைத் திறக்கிறது என்று அவர் சொன்னார்.

மலேசியத் தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் முத்தமிழ் மன்னன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் உட்பட 100 க்கும் மேற்பட்ட சங்க உறுப்பினர்கள் திராளாக கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles