புனித அன்னை பை ஷி யீன்  தலைமையில் புனித நீர் தெளிக்கப்பட்டு மலேசியாவின் மிக பெரிய சிவன் ஆலய கட்டுமானம் தொடக்கம்!

பினாங்கு, ஆகஸ்ட் 17-

மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ ஆர்.எஸ் தனேந்திரனின் தலைமையில் கட்டப்படும் ஸ்ரீ கெங்காதரன் சிவபெருமான் ஆலயத்தின் கட்டுமானப்பணிகள் நேற்று முன்தினம் தொடங்கப்பட்டது.

மலேசியாவின் மிக பெரிய சிவன் ஆலயமாக திகழவிருக்கும் இந்த புனித திருத்தலத்தின் கட்டுமான பணியை
புனித அன்னை பை ஷி யீன் அவர்காள் புனித நீர் தெளித்து தொடக்கி வைத்தார்.

பிற்பகல் 3.00 மணியளவில் இந்நிகழ்வு தொடங்கப்பட்டத. இந்த நிகழ்வில், பினாங்கு மாநில வீட்டுவசதி மற்றும் சுற்றுச்சூழலுக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் மாண்புமிகு டத்தோஸ்ரீ சுந்தரராஜூ சோமு கலந்து கொண்டு, கோயில் கட்டுமான முன்னேற்றத்தை தனிப்பட்ட முறையில் மதிப்பாய்வு செய்தார்.

எதிர்காலப் பயணத்திற்கான ஆசீர்வாதங்களையும் பலத்தையும் தரும் புனிதமான செயலாக இந்த நிகழ்வு அனைவராலும் சிறப்பாகக் கருதப்பட்டது.

சமூகத்தின் கலாச்சாரம் மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்கு அரசின் வலுவான ஆதரவைக் குறிக்கும் வகையில் அவரது வருகை அமைந்திருந்தது.

கோயில் தலைவர் திரு. சிவா அவர்களும் மற்றும் கோயில் குழுவினரின் அர்ப்பணிப்பு, கோயிலின் முன்னேற்றத்தையும் சமூக ஒற்றுமையையும் வலுப்படுத்தும் விதமாக இருப்பதாக டத்தோஸ்ரீ தனேந்திரன் தெரிவித்தார்.

சமூகத்தினர், இந்த நிகழ்வு கோயில் வளர்ச்சிக்கான முக்கிய அடித்தளமாகவும், எதிர்கால சந்ததியினருக்கு ஆன்மீக வழிகாட்டுதலாகவும் அமையும் என நம்பிக்கை தெரிவித்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles