
முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு, கருணாநிதியின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கோலாலாம்பூர், டாங் வாங்கி, செய்யத் பிஸ்ட்ரோ உணவகத்தில் கலைஞரின் பிறந்த நாள் கொண்டாட்ட நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு திமுக துணை பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ. இராசா, நாடாளுமன்ற மேலவை முன்னாள் உறுப்பினர் எம். எம். அப்துல்லா ஆகியோர் சிறப்பு வருகை புரிந்து உரை நிகழ்த்தினர்.
வெளிநாட்டு வாழ் தமிழ் இந்தியர் சங்கம் மற்றும் மலேசியா தமிழ் சங்கங்கள் இணைந்து எம்.எம். அப்துல்லா முன்னிலையில் நடத்தப்பட்ட முத்தமிழ் அறிஞர் கலைஞரின் பிறந்த நாள் கொண்டாட்ட நிகழ்வில் கலைஞரின் தீவிர ஆதரவாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

