
சிரம்பான் ஆக 18-
நேசா கூட்டுறவு கழகத்தின் 50 ஆம் ஆண்டு பொன்விழா நேற்று மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
இவ்விழாவை முன்னிட்டு, பல்வேறு திட்டங்களுக்கான நிதிகள் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டன.

முதலில், நிலத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட நிதிகள்:
• பெந்தோங் நிலத்தின் உறுப்பினர்களுக்கு மொத்தம் ரி.ம. 563,454.69 மதிப்பில் 20 பேருக்கு வழங்கப்பட்டது.
• குளுவாங் நிலத்தின் உறுப்பினர்களுக்கு மொத்தம் ரி.ம. 250,000.00 மதிப்பில் 3 பேருக்கு வழங்கப்பட்டது.
அடுத்து, ரந்தாவ் வீட்டமைப்பு திட்டம் மூலம், மொத்தம் ரி.ம. 1,265,275.16 மதிப்பில் 14 உறுப்பினர்களுக்கு நிதிகள் வழங்கப்பட்டன.
மேலும், 2024 ஆம் ஆண்டிற்கான “Nesa Merit Award” எனப்படும் “SPM/STPM” மாணவர்களுக்கான கல்வி ஊக்குவிப்பு நிதி மொத்தம் ரி.ம. 36,900 மதிப்பில் சுமார் 46 மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
தொடர்ந்து 2024 ஆம் ஆண்டிற்கான உள்நாட்டுப் பல்கலைக்கழங்களில் கல்வியைத் தொடரவிருக்கும் உறுப்பினர்களின் பிள்ளைகளுக்கு University Start Up Package நிதி மொத்தம் ரி.ம. 14,500 மதிப்பில் சுமார் 29 மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
2024 ஆம் ஆண்டிற்கான நேசாவின் திருமணம் அன்பளிப்பாக சட்டப்பூர்வமாக திருமணம் செய்துகொள்ளும் நேசா உறுப்பினர்களுக்கு ரி.ம. 250 உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது.
அடுத்தப்படியாக 75 வயதுக்கு மேற்பட்ட உறுப்பினர்களுக்கு அன்பளிப்பாக மொத்தம் ரி.ம. 42,000 மதிப்பில் சுமார் 42 மூத்த உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது.
இறுதியாக 2024 ஆண்டிற்கான நேசா மரண சகாய நிதி மொத்தம் ரி.ம. 157,000 மதிப்பில் சுமார் 77 உறுப்பினர்களின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்டது.
இவ்வாறு வழங்கப்பட்ட நிதிகளின் மொத்த தொகை ரி.ம. 2,329,879.85 ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

