

செந்தூல், ஆக 19-
நாட்டின் 68 ஆவது மெர்டேக்கா தின கொண்டாட்டத்தை முன்னிட்டு பிபிபி நேஷனல் மற்றும் விலாயா மாநில பிபிபி கட்சி ஆயிரம் தேசிய கொடிகளை பொதுமக்கள் மற்றும் வணிகர்களுக்கு வழங்கியது.
ஜலூர் கெமிலாங் கொண்டாட்ட விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை Sentul Raya Boulevard வளாகத்தில் பிபிபி கட்சியின் தேசிய தலைவர் தலைவர் டத்தோ டாக்டர் லோகாபால மோகன் தலைமையில் நடைபெற்றது.
இந்த விழாவில் பிபிபி தலைமை செயலாளர் Dato Inder Singh, தேசிய தகவல் தலைவர் திரு. ஸ்டீபன் அசெகலின் பெர்னாண்டஸ், தேசிய இளைஞர் தலைவர் மற்றும் விலாயா மாநிலத் தலைவர் சத்யா சுதாகரன், தேசிய மகளிர் தலைவி புனிதா முனுசாமி, விலாயா மாநில பிபிபி இளைஞர் அணி தலைவர் நவீன் முத்துசாமி, பத்து தொகுதி தலைவர் ஜோன் கீரன் மகேந்திரன் தலைமையிலான PPP உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டனர்.
அவர்கள் மலேசியக் கொடியை பொதுமக்களிடம் வழங்கி உதவி புரிந்தனர்.
இதனிடையே கடந்த வாரம் இறுதியில் பிபிபி கட்சியின் சார்பில் நாடு தழுவிய அளவில் தேசியக் கொடிகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

