மலேசிய இந்திய சமூகத்திற்கு உதவிகள் பலத்துறைச் சேவைகள் மூலம் வழங்கப்படுகிறது — MITRA மட்டும் அல்ல — பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் அறிவிப்பு

கோலாலம்பூர் ஆக 19
மலேசிய இந்திய சமூகத்திற்கு வழங்கப்படும் ஒதுக்கீடுகள் மற்றும் உதவிகள் முறையே MITRA (Malaysian Indian Community Transformation Unit) என்ற ஒரேயொரு பிரிவுக்கு மட்டுமே செல்லாமல், பல அமைச்சுக்களுக்கும் வழியாக முழுமையாக சீரமைக்கப்பட்டு வழங்கப்படுகிறது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். 

கல்வி, வீடமைப்பு மற்றும் வணிகம் போன்ற துறைகளில் பல அமைச்சுகளில் இருந்து பொதுமக்களுக்கு பெரும் அளவில் நிதி ஒதுக்கீடுகள் கிடைக்கின்றன.

அதோடு ஓராண்டு 100 மில்லியன் ரிங்கிட் MITRAக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

உதாரணமாக, Sumbangan Tunai Rahmah (STR) என்ற பண உதவி 2022 ஆண்டு இந்திய சமூகத்திற்கு மொத்தம் அரை பில்லியன் ரிங்கிட் வழங்கப்பட்டது

ஆனால் 2025-இல் இதுவும் 1 பில்லியன் ரிங்கிட் அளவில் உயர்ந்துள்ளது. கூடுதலாக, Housing Credit Guarantee Scheme மூலம் 1.2 பில்லியன் ரிங்கிட் வழங்கப்பட்டுள்ளது.

2024-இல் MITRAவுக்கு 100 மில்லியன் ஒதுக்கீட்டில் 98.9 மில்லியன் செலவு செய்யப்பட்டு, 122,082 இந்திய சமூக உறுப்பினர்களுக்கு உதவியாக்கப்பட்டது.

மற்றவைகளைச் சேர்த்துப் பார்ந்தால்:

•   ஆரம்பக் கல்விக்கான நிதி உதவி: 93 மில்லியன்

•   B40 வகை இந்திய மாணவ-மாணவிகளுக்கான உயர் கல்வி உதவி: 17.63 மில்லியன்.

• தமிழ்ப் பள்ளி (SJKT) மாணவர்களுக்கு  லேப்டோப் உதவி: 2.99 மில்லியன்  மூலம் 6,000 லேப்டோப்  வழங்கப்பட்டுள்ளது. 

அரசாங்கம் இந்திய சமூகத்தை புறக்கணிக்கிறது கொள்கிறது” அல்லது “MITRAக்கு ஒதுக்கீடுகளுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை என்ற கருத்துக்கள் தவறானவை என்று அவர் கூறினார்.

சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் கேசவன் அவர்கள் இந்திய சமூகத்தின் சமூக–பொருளாதார நிலையை மேம்படுத்துவதில் MITRAவையே பிரதானமாக பயன்படுத்திக் கொள்வதா அல்லது பிற அமைப்புகளும் உள்ளதா என கேள்வி எழுப்பியதை தொடர்ந்து பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதற்கு பதில் அளித்தார்.

2025-இல், சமூகத்திற்கு உதவிகளை ஒரு மட்டத்தில் அல்லாமல் ஒவ்வொரு அமைச்சுகளும் செயல்படுத்தி MITRA ஒத்துழைப்பு மூலம் ஒருங்கிணைக்கப்படுவதாக அவர் அறிவித்தார்.

•   உதாரணமாக, Housing Ministry (KPKT)-வின் வீடமைப்பு திட்டத்திற்கு MITRAவின் நிதியால் குறைபாடுகளை நிறைவேற்றும் வகையில் ஒத்துழைப்பு நடைபெறும்.


•   ICT ஆய்வக உபகரண உதவி 50 தமிழ்ப் பள்ளிகளுக்கு (SJKT) கல்வி அமைச்சகம் 5 மில்லியன், MITRAவிலும் நிதி வழங்கப்படுகிறது.


•   200 இந்து வழிபாட்டு தலங்கள் (Hindu temples) அல்லது உள்ளூர் மக்கள் மையங்கள் (Local Community Centres) 20 மில்லியன் ஒதுக்கீடு பெறும்.

கூடுதலாக, ICU (Implementation Coordination Unit), பிரதமர் துறையிலிருந்தும் ஒரு முறை ஒதுக்கீடாக 10 மில்லியன் வழங்கப்பட்டுள்ளது.

இது இந்தியத் தோட்டத் தொழிலாளர்களின் வீடுகளின் சரி செய்தல் அடங்கும் .

கடுமையான வறுமை எதிர்கொள்ளும் இந்திய சமூகத்தினரின் பிரச்சினைக்கு, MADANI பொருளாதார கட்டமைப்பு எந்த இனத்தையும் பொருட்படுத்தாமல் அனைத்து மாநிலங்களிலும், அனைத்து மாவட்டங்களிலும் வறுமையை முற்றிலும் அகற்றுவதை நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது என்று பிரதமர் வலியுறுத்தினார்.

•   இந்திய சமூகத்தின் மக்கள் தொகை மற்றும் வறுமையில் இருக்கும் எண்ணிக்கை குறைவானாலும், “அந்த சமூகத்திலும் மிகவும் வறுமை அடைந்தவர்கள் உள்ளனர்” — அதுவே நாம் கவனிக்க வேண்டிய பகுதியாகும். 

இந்த காரணத்தினால் கடுமையான வறுமையைத் திறமையாக அகற்ற திட்டங்களை ஒருமையாக வடிவமைக்க வேண்டியது அவசியம் என்பது சீரிய கொள்கையென அவர் குறிப்பிட்டார்.

கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் கண்பதிராவ் (PH-கிள்ளான்) அவர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில், 13ஆவது மலேசியப் திட்டத்தில் இந்திய சமூகத்தின் வறுமையை அகற்றுவதற்கான தெளிவு வழிகாட்டல்களை பற்றி சுட்டிக் காட்டினார்.

பெர்னாமா

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles