
கோலாலம்பூர் ஆக 20-
புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) இயக்குநராக டத்தோ குமாரை நியமித்ததை ஆதரித்து, அரசாங்கத்தில் முக்கியமான பதவிகளை வகிக்கும் திறமையான நபர்களுக்கு இனம் தடையாக இருக்கக்கூடாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
இது எனக்கு ஒரு பிரச்சினை அல்ல. அந்தப் பணியைச் செய்யக்கூடிய எவரும் அதற்குத் தகுதியானவர் என்று நிதி அமைச்சகத்தின் மாதாந்திரக் கூட்டத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சுட்டிக் காட்டினார்.
மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு அமைப்பின் தலைவராக மாற்றப்பட்ட ஷுஹைலி ஜெய்னுக்குப் பதிலாக, ஆகஸ்ட் 8 ஆம் தேதி டத்தோ குமார் அதிகாரப்பூர்வமாக மத்திய CID தலைவராகப் பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

