பிரிக்பீல்ட்ஸ் அருள்மிகு கற்பக விநாயகர் ஆலயத்தில் அகத்தியர் பெருமானுக்கு சிறப்பு பூஜை!

கோலாலம்பூர் ஆக 21-
தலைநகரில் மிகவும் பிரசித்தி பெற்ற பிரிக்பீல்ட்ஸ் அருள்மிகு கற்பக விநாயகர் ஆலயத்தில் இன்று அகத்தியர் பெருமானுக்கு சிறப்பு பூஜை மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

வரும் ஆகஸ்ட் 27 ஆம் தேதி கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அகத்தியர் பெருமானுக்கு இந்த சிறப்பு பிரார்த்தனையும் பூசையும் நடைபெற்றது.

காலையில் 108 சங்காபிஷேகத்துடன் ஹோம பிரார்த்தனை நடைபெற்றது .

அகத்தியர் பெருமானின் தொண்டர் எஸ். பக்தவச்சலம் தலைமையில் அகத்தியரை வழிபடும் தொண்டர்கள் இதில் கலந்து அகத்தியரை வழிபட்டனர்.

மதியம் 12.30 மணிக்கு மேல் மகேஸ்வர பூஜையைத் தொடர்ந்து பக்தர்களுக்கு சுவையான அன்னதானமும் பரிமாறப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் இந்த ஆலயத்தில் அகத்தியர் குருபூஜை விழா மற்றும் அகத்தியர் சிறப்பு பூஜை விமரிசையாக நடைபெற்று வருகிறது என்று பக்தவச்சலம் தெரிவித்தார்.கோலாலம்பூர் ஆக 21-
தலைநகரில் மிகவும் பிரசித்தி பெற்ற பிரிக்பீல்ட்ஸ் அருள்மிகு கற்பக விநாயகர் ஆலயத்தில் இன்று அகத்தியர் பெருமானுக்கு சிறப்பு பூஜை மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

வரும் ஆகஸ்ட் 27 ஆம் தேதி கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அகத்தியர் பெருமானுக்கு இந்த சிறப்பு பிரார்த்தனையும் பூசையும் நடைபெற்றது.

காலையில் 108 சங்காபிஷேகத்துடன் ஹோம பிரார்த்தனை நடைபெற்றது .

அகத்தியர் பெருமானின் தொண்டர் எஸ். பக்தவச்சலம் தலைமையில் அகத்தியரை வழிபடும் தொண்டர்கள் இதில் கலந்து அகத்தியரை வழிபட்டனர்.

மதியம் 12.30 மணிக்கு மேல் மகேஸ்வர பூஜையைத் தொடர்ந்து பக்தர்களுக்கு சுவையான அன்னதானமும் பரிமாறப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் இந்த ஆலயத்தில் அகத்தியர் குருபூஜை விழா மற்றும் அகத்தியர் சிறப்பு பூஜை விமரிசையாக நடைபெற்று வருகிறது என்று பக்தவச்சலம் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles