
கோலாலம்பூர் ஆக 21-
பகடிவதைக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்ட தவனேஸ்வரி மரணம் குறித்து உள்துறை அமைச்சு – போலீஸ் விசாரணையை தூரித படுத்த வேண்டும் என்று ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ராயர் இன்று கேட்டுக் கொண்டார்.
கடந்த மாதம் தவனைஸ்வரி பகடிவதைக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இன்று நாடாளுமன்ற கட்டடத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தவனேஸ்வரி பெற்றோருடன் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராவ், பெருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினரின் இந்திய பிரிவு அதிகாரி தினகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தவனேஸ்வரி தற்கொலை சம்பவம் தொடர்பில் அவரின் தாயார் லலிதா காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.
இந்த போலீஸ் புகார் அடிப்படையில் தவனேஸ்வரிக்கு நீதி கிடைக்க உள்துறை அமைச்சு மற்றும் காவல் துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.