
காளிதாஸ் சுப்ரமணியம்
கோலாலம்பூர் ஆக 22-
நாட்டின் 68 ஆவது மெர்டேக்கா தினத்தை முன்னிட்டு
ம இகா தேசிய இளைஞர் அணியின் ஆதரவோடு விலாயா மாநில மஇகா இளைஞர் தகவல் பிரிவு இன்று பொதுமக்களுக்கு தேசிய கொடிகளை வழங்கி உற்சாகப்படுத்தியது.
பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியாவில் பொதுமக்களுக்கும் தேசிய கொடிகளை வழங்கிய வேளையில் வாகனங்களிலும் தேசிய கொடிகள் பொறுத்தப்பட்டது.
விலாயா மாநில ம இகா இளைஞர் தகவல் பிரிவு தலைவர் சக்தி ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் விலாயா மாநில ம இகா தலைவர் டத்தோ சைமன் ராஜா, ம இகா தேசிய இளைஞர் அணி தலைவர் அர்விந்த், துணை தலைவர் கேசவன், மத்திய செயலவை உறுப்பினர் டத்தோ ராஜசேகரன் உட்பட இளைஞர் அணியினர் பெரும் அளவில் கலந்து சிறப்பித்தனர்.
மலேசியர்களாகிய நாம் மெர்டேக்கா தினத்தை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ வேண்டும் என்று டத்தோ ராஜா சைமன் கேட்டுக் கொண்டார்.

