Blues Brothers Welfare Association Malaysia ஏற்பாட்டில் விலாயா – சிலாங்கூர் தமிழ்ப் பள்ளிகள் இடையிலான கால்பந்து போட்டி விமரிசையாக நடைபெற்றது!

கோலாலம்பூர் ஆக 23-
நாட்டில் புகழ்பெற்ற Blues Brothers Welfare Association Malaysia ஏற்பாட்டில் நடைபெற்ற சிலாங்கூர் – விலாயா மாநில தமிழ்ப் பள்ளிகள் இடையிலான கால்பந்து போட்டியில் மொத்தம் ஆறு பள்ளிகள் பங்கேற்றன.

புக்கிட் ஜாலில், சன் பெங், சிகாம்பூட் -A, சிகாம்பூட் -B, பூச்சோங் கின்ராரா, பூச்சோங் சத்யா சாய் ஆகிய தமிழ்ப் பள்ளி மாணவர்கள் இந்த போட்டியில் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

சிகாம்பூட் தமிழ்ப் பள்ளி நிர்வாக துணை தலைமை ஆசிரியர் திருமதி உஷா, பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் சுரேஸ் குமார், பள்ளி மேலாளர் வாரியத் தலைவர் வீரா ,சிகாம்பூட் தமிழ்ப் பள்ளி கால்பந்து குழு பயிற்றுநர் ராஜேந்திரன் வேலு ஆகியோர் உட்பட பலரும் போட்டி நடைபெற முழு ஒத்துழைப்பை நல்கினர்.

Blues Brothers சமூக நல இயக்கத்தின் தலைவர் சமாட் தலைமையில் பூளூ பிரார்தஸ் உறுப்பினர்கள் இந்த போட்டிக்கு முழு ஆதரவு வழங்கினர்.

Blues Brothers இயக்கத்தின் இளைஞர் அணி தலைவர் டத்தோ சங்கர் பெயரில் நடத்தப்பட்ட இந்த கால்பந்து போட்டியை காண

  • India Blues Brothers Mr.Bala,
  • Malaysia Ajks Salim,Guna,Rahman,Rafi, மைக் ரமேஷ், தில்லை, அப்பு மற்றும்
    ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த
    அழகு சுசித்ரா,
    சாரா ஆகியோரும் சிறப்பு வருகை புரிந்தனர்.

தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கால்பந்து துறையில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக இந்த போட்டியை ஏற்பாடு செய்தோம்.

மேலும் சகோதரர் ஜீவா வழங்கிய ஆதரவும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்று சமாட் தெரிவித்தார்.

  • Singapore Blues Brothers Welfare Mr.G.Chandrasekhar ( Kollywood movie producer )
  • Vanakam India Restaurant
  • ஆகியோருக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார் அவர்.

இதனிடையே இனிவரும் காலங்களில் இந்த போட்டி மேலும் சிறப்பாக நடத்த ஆதரவு வழங்குவோம் என்று ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அழகு சுசித்ரா மற்றும் இந்த நிகழ்வை ஆதரிக்க ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கென்டிஷ் சமூக சேவை தலைமை நிர்வாக அதிகாரி திருமதி சாராவும் மலேசியாவிற்கு வந்துள்ளனர்.

Blues Brothers இயக்கம் மேற்கொள்ளும் இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிப்போம் என்று அவர்கள் உற்சாகத்துடன் குறிப்பிட்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles