கோலாலம்பூர் சென்ட்ரல் டிஜிட்டல் கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பு விழா மிகவும் விமர்சையாக நடைபெற்றது!

கோலாலம்பூர்: ஏப் 23-
கோலாலம்பூர் சென்ட்ரல் டிஜிட்டல் கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பு விழா கடந்த வாரம் மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

இவ்விழாவில் 144 மாணவர்கள் பட்டம் பெற்றனர் என்று தலைமை இயக்குநர் அன்பானந்தன் கூறினார்.

கோலாலம்பூர் சென்ட்ரல் டிஜிட்டல் கல்லூரி கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது.

தரமான கல்வியின் மூலம் மாணவர்களை சாதனையாளர்களாக உருவாக்க வேண்டும் என்பது இக்கல்லூரியின் முதன்மை நோக்கமாகும்.

அதன் அடிப்படையில் கல்லூரியில் படிப்பை முடித்த மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது.

இது தான் இக்கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பு விழாவாகும்.

லோஜிஸ்டிக், மேலாண்மை துறையில் ஆக அதிகமாக 82 மாணவர்கள் டிப்ளோமா பட்டம் பெற்றனர்.

வணிக நிர்வாக துறையில் 45 மாணவர்களும், மென்பொருள் பொறியியல் துறையில் 6 மாணவர்களும், தகவல் தொழில்நுட்ப துறையில் 5 மாணவர்களும், கணக்கியல் துறையில் 6 மாணவர்களும் டிப்ளோமா பட்டம் பெற்றனர் என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles