

ஷா ஆலம் ஆக 25-
ஷா ஆலம் புக்கிட் கெமுனிங்கில் அருள் பாலித்துக் கொண்டிருக்கும் மகா காளியம்மன் ஆலயத்தின் 55 ஆம் திருவிழா நேற்று ஆகஸ்ட் 24 ஞாயிற்றுக்கிழமை மிகப்பெரிய அளவில் நடைபெற்றது.
காலையில் சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் பக்தர்கள் பால்குடம் காவடிகள் ஏந்தி தீமதியில் இறங்கி அம்மனுக்கு காணிக்கை செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து மகேஸ்வர பூஜைக்கு பின்னர் பக்தர்களுக்கு சுவையான அன்னதானமும் பரிமாறப்பட்டது.


சக்தி வாய்ந்த மகா காளியம்மன் ஆலயத் திருவிழாவில் இம்முறை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்று டத்தோ ஜோ சரவணன் தெரிவித்தார்.
வழிநெடுகிலும் அரசு சார்பற்ற அமைப்புக்கள் பந்தல் அமைத்து பக்தர்களுக்கு கனிமநீர் மற்றும் பழங்களை வழங்கினர்.
மகா காளியம்மன் ஆலயத் திருவிழாவில் ம இகா தேசிய தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதிராவ், கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ், டத்தோ டி.மோகன், கஜேந்திரன், வழக்கறிஞர் கோகிலா உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

