
வரும் ஆகஸ்ட் 27 ஆம் தேதி உலகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா மிகவும் விமர்சையாக கொண்டாடப்படவுள்ளது
அந்த வகையில் தலைநகர் கோர்ட்டுமலை பிள்ளையார் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழாவுடன் தங்க ரத ஊர்வலம் சிறப்பான முறையில் நடைபெறவுள்ளது என்று
ஶ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான தலைவர் டான்ஶ்ரீ ஆர். நடராஜா தெரிவித்தார்.
மலேசியாவில் கோர்ட்டுமலை பிள்ளையார் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்படவுள்ளது.
நாளை ஆகஸ்ட் 26ஆம் தேதி மாலை 4 மணி முதல் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். மாலை 7 மணிக்கு விநாயகர் சதூர்த்தி விழாவை முன்னிட்டு கொடியேற்று வைபவம் நடைபெறும்.
அதனைத் தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு ஶ்ரீ கணேசர் பெருமான் தங்க ரதத்தில் தலைநகரை சுற்றி வலம் வருவார்.
இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 27ஆம் தேதி காலை முதல் விநாயகர் சதுர்த்தி பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறும் என்று அவர் சொன்னார்

