
மலாக்கா, ஆக 25-
எப்ஏஎம் எனப்படும் மலேசிய கால்பந்து சங்கத்தின் உதவித் தலைவர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநில கால்பந்து சங்கத்தின் உதவித் தலைவருமான பிரபல வழக்கறிஞர் சேரன் நடராஜாவுக்கு டத்தோ எனும் உயரிய விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டுள்ளது.
மலாக்கா மாநில ஆளுநரின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று பல முக்கிய பிரமுகர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டன.
அந்த வகையில் நெகிரி செம்பிலான் மாநில இந்தியர் விளையாட்டு பேரவைத் தலைவர், நெகிரி செம்பிலான் இந்தியர் கால்பந்து கிளப் தலைவர் சேரன் நடராஜா வுக்கு டத்தோ விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னர் மலேசிய இந்தியர் விளையாட்டு பேரவையின் செயலாளராக பத்து ஆண்டுகள் இருந்து திறம்பட சேவையாற்றி இருக்கிறார்.
மக்கள் தலைவர் டான்ஸ்ரீ சுப்ரமணியம் அவர்கள் மலேசிய இந்தியர் விளையாட்டு பேரவைத் தலைவராக இருந்த காலத்தில் அதன் செயலாளராக சேரன் நடராஜா பதவி வகித்தார்.
பரதன் கிண்ண கால்பந்து போட்டியை மிகப்பெரிய அளவில் நடத்திய பெருமை இவரைச் சாரும்.
மக்கள் தலைவோடு கைக்கோர்த்து பல சமுதாய சேவையிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர் வழக்கறிஞர் சேரன் நடராஜா ஆவார்.
ஆசியா கால்பந்து சம்மேளனம் உட்பட அனைத்துலக கால்பந்து சம்மேளனத்திலும் உறுப்பியம் பெற்றிருக்கும் சேரன் நடராஜா
விளையாட்டு துறைக்கும் சமூகத்திற்கு சிறந்த முறையில் சேவையாற்றி இருக்கிறார் .
இந்த தருணத்தில் டத்தோ சேரன் நடராஜாவுக்கு மலேசிய இந்தியர் விளையாட்டு பேரவை சார்பில் அதன் தலைவர் டத்தோ சுப்ரா ரத்னவேலு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளார்.

