ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் குலம் காக்கும் மகா காளி மியூசிக் விடியோ வெளியீடு கண்டது!

ஷா ஆலம், ஆக 25-
நாட்டில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடும் கோவிலாக உருவெடுத்திருக்கும் ஷா ஆலம் புக்கிட் கெமுனிங் மகா காளியம்மன் கோவில் 55 ஆம் ஆண்டு திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

மூன்று தினங்களாக நடைபெற்ற இந்த ஆலயத் திருவிழாவில் குறைந்தது பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து சிறப்பித்தனர்.

கடந்த ஆகஸ்ட் 22 ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணிக்கு மேல் நடைபெற்ற விழாவில் சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராயுடு கலந்து சிறப்பித்தார்.

அன்றைய தினத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் குலம் காக்கும் மகா காளி மியூசிக் விடியோ வெளியீடு கண்டது.

புக்கிட் கமுனிங் மகா காளியம்மன் கோவில் தலைவர் ஆறுமுகம், அவரின் சகோதரர்கள் டத்தோ ஜோ சரவணன், டத்தோ கணேசன் உட்பட கோவில் நிர்வாகத்தினர் பெரும் அளவில் கலந்து சிறப்பித்தனர்.

இந்த கோவில் பெருமையை உலகிற்கு எடுத்துக் காட்டும் வகையில் குலம் காக்கும் மகா காளி மியூசிக் விடியோ தற்போது
YouTube Page : Logesh Entertainment பதிவேற்றம் கண்டுள்ளது

தயாரிப்பாளர்
Sir Jana,
Satish Varan,
Arena Matriks Edu Group
STLS Group இந்த பாடலை பக்தி பரவேசத்துடன் இந்த மியூசிக் விடியோ பாடலை தயாரித்து சாதனை படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles