நாட்டின் பாதுகாப்பு கட்டுப்பாட்டில் உள்ளது

கோலாலம்பூர், ஆகஸ்ட் 25 – பாலஸ்தீன விடுதலையை ஆதரிப்பதில் மலேசியாவின் உறுதியான நிலைப்பாட்டைத் தொடர்ந்து அந்நிய நாட்டு அச்சுறுத்தல்கள் அதிகரித்தபோதிலும், நாட்டின் பாதுகாப்பு கட்டுப்பாட்டில் இருப்பதாக தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.

“ஆனால், அதை மறுக்க முடியாது. காசா மற்றும் பாலஸ்தீனப் பிரச்சனைகளில் அதிகக் குரல் எழுப்புவதில் அரசாங்கமும் பிரதமரும் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதால், உண்மையில் அவர் தென்கிழக்கு ஆசியாவில் அதிகம் கண்காணிக்கப்படும் தலைவர்களில் ஒருவராவார்.,” என்றார் அவர்.

உணர்ச்சிகளால் இயக்கப்படாத மலேசியாவின் கொள்கை ரீதியான நிலைப்பாடு தற்போது நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாகவும் அவர் வலியுறுத்தினார்.

எந்தவொரு அச்சுறுத்தலையும் இலகுவாக கருதாமால், பாதுகாப்பின் அனைத்து அம்சங்களும் முறையாகக் கையாளப்படுவதை உறுதிசெய்ய, தேசிய பாதுகாப்பு மன்றம் அவ்வப்போது விளக்கங்களை வழங்கி வருவதாக அவர் மேலும் கூறினார்.

பெர்னாமா

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles