



கோலாலம்பூர் ஆக 27-
இன்று உலகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் ஆலயங்கள் விழாக்கோலம் பூண்டுள்ளது.
மலேசியத் திருநாட்டில் விநாயகர் ஆலயங்களில் விநாயகர் பெருமானை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் பெரும் அளவில் நிரம்பியுள்ளது.
அந்த வகையில் நாட்டில் புகழ்பெற்ற கோலாலம்பூர் கோர்ட்டு மலை பிள்ளையார் கோவிலில் காலை முதல் இரவு வரை பக்தர்கள் வரிசையில் நின்று விநாயகரை தரிசித்த வண்ணம் உள்ளனர்.
இந்த தருணத்தில் GA force security நிறுவனத்தின் உரிமையாளர் ஜீவா – பானு குடும்பத்தினர் பக்தர்களுக்கு சுவையான அன்னதானம் வழங்கினர்.
GA force security நிறுவனத்தின் சார்பில் பத்தாம் ஆண்டாக விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 1,500 பக்தர்களுக்கு சுவையான அன்னதானம் குளிர்பானங்களையும் தங்கள் குடும்பத்தின் சார்பில் வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.
தெய்வத்தின் அருளால் பக்தர்களுக்கு தொடர்ந்து சுவையான அன்னதானத்தை தமது குடும்பத்தின் சார்பில் வழங்குவேன் என்று ஜீவா தெரிவித்தார்.

