தெலுக் இந்தான் (Teluk Intan) சுங்கை தீமா தமிழ்ப்பள்ளி ( SJKT Sungai Timah) மூடப்பட்டது குறித்து முழு அறிக்கை வேண்டும்!

கோலாலம்பூர் ஆக 29-
பேராக்கிலுள்ள சுங்கை தீமா ( Sungai Timah Teluk intan) தமிழ்ப்பள்ளி மூடப்பட்ட காரணம் குறித்து கல்வி அமைச்சும், பேராக்கில் உள்ள இந்தியர்களை பிரதிநிதிக்கும் அரசு பிரதிநிதிகள் முழு அறிக்கை வெளியிட வேண்டும் என்று பகாங் மாநில உரிமை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கணேசன் கேட்டுக் கொண்டுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக குறைந்த மாணவர்களுடன் செயல்பட்டு கொண்டிருந்த பேராக் தெலுக் இந்தான் வட்டாரத்தில் உள்ள
சுங்கை தீமா தோட்டத் தமிழ்ப்பள்ளி மூடப்பட்ட செய்தியை கண்டு இந்திய சமுதாயம் அதிர்ச்சயடைந்துள்ளது.

88 ஆண்டுகள் மிக நீண்ட வரலாற்றை கொண்ட சுங்கை தீமா தமிழ்ப் பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு சென்று வர போதிய போக்குவரத்து வசதி இல்லாததால் , மாணவர் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வந்த நிலையில் அப்பள்ளி மூடுவிழா கண்டு விட்ட செய்தி மலேசிய இந்திய சமுதாயத்துக்கு மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

அண்மையில் கல்வி அமைச்சு, நாட்டில் மொத்தம் 3063 பள்ளிகளில் குறைவான எண்ணிக்கையில் மாணவர்கள் இருக்கிறார்கள். அதில் 383 தமிழ்ப்பள்ளிகளும் அடங்கும் என்ற செய்தி வெளியிடப்பட்டது.

மலேசிய நாட்டின் மக்கள் தொகை எண்ணிக்கையில
இந்திய சமூகத்தின் விகிதாச்சாரம் மிக வேகமாக குறைந்து கொண்டே வருவது ஒரு காரணமாக இருந்தாலும், இப்பொழுது உள்ள சூழ்நிலையில் நிறைய தமிழ்ப்பள்ளிகள் இடம் மாற்றம் செய்யப்பட வேண்டிய கட்டாய நிலையில் உள்ளது.

ஆரம்ப கால கட்டத்தில் தோட்ட புறங்களில் மிக அதிகமான தமிழ்ப்பள்ளிகள் அமைந்திருந்தன.

கால போக்கில் தோட்டங்கள் துண்டாடல், குறைந்த வருமானம், மற்றும் சாலை, தண்ணீர், மிண்சாரம் போன்ற குறைவான அடிப்படை வசதி, போன்ற வாழ்வாதார
காரணமாக அங்கிருந்து மக்கள் வெளியேற வேண்டிய கட்டாய சூல்நிலை ஏற்பட்டது.

தமிழ்ப்பள்ளிகள் இந்நாட்டில் இந்திய சமூகத்தின் மிக முக்கியமான அடையாளமாக விளங்கி வருகிறது.

அதை பாதுகாக்க வேண்டும் என்ற காரணத்தினால், இந்தியர்கள் அதிகம் வாழும் பகுதியில்
பள்ளிகளை இடம் மாற்றம் செய்ய சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசு சாரா அமைப்புகள் கல்வி அமைச்சிடம் பல காலமாக தொடர்ந்து கோரிக்கைகளை வைத்து வருகின்றனர்.

அண்மையில் கல்வி துணை அமைச்சர், மாணவர்கள் குறைவாக இருக்கும் தமிழ்ப்பள்ளிகள் மூடப் படாது என்று உறுதி அளித்திருந்தார்.

ஆயிணும்
சுங்கை தீமா தமிழ்ப் பள்ளி மூடப்பட்டுவிட்டது. இந்நிலையில் தமிழ்ப்பள்ளிகள் புறக்கணிக்கப்படுகின்றன என்ற கருத்து சமூகத்தில் நிலவி வருகிறது.

இந்நிலையில் பேரா மாநிலத்தில் உள்ள சுங்கை தீமா தமிழ்ப்பள்ளியை இடம் மாற்றம் செய்ய மற்றும் மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து கல்வி அமைச்சு முழு அறிக்கை வெளியிட வேண்டும்.

அதே வேளையில் பேராக் மாநிலத்தில் நடைமுறை அரசாங்கத்தில் இருக்கும் இந்திய பிரதிநிதிகள் இந்த பள்ளி மூடப்படாமல் இருக்க என்ன முயற்சிகளை செய்தீர்கள் ? என்று விளக்க வேண்டும்.

இப்பள்ளியின் உரிமம்/லைசென்ஸ்
என்ன ஆனது என்பதையும் விளக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles