விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பிறை சட்டமன்ற தொகுதி சேவை மையத்தின் அன்னதானம்!

பிறை ஆக 29-
இரு தினங்களுக்கு முன்னர் விநாயகர் சதுர்த்தி விழா உலகம் முழுவதும் மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டது.

மலேசியத் திருநாட்டில் விநாயகர் ஆலயங்கள் பக்தர்கள் வருகையால் விழாக் கோலம் பூண்டது. அந்த வகையில் பினாங்கு பிறை செல்வ விநாயகர் ஆலயத்திலும் விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் ரத ஊர்வலம் சிறப்பாக நடைபெற்றது.

இரவு நேரத்தில் நடைபெற்ற ரத ஊர்வலத்தின் போது பிறை சட்டமன்ற தொகுதி சேவை மையத்தின் ஏற்பாட்டில் பக்தர்கள் சுவையான அன்னதானம் வழங்கப்பட்டது.

பினாங்கு மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் மற்றும் பிறை சட்டமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ ராஜூ, கவுன்சிலர் பொன்னுத்துரை, பிறை எம்பிபிகே தலைவர் ஸ்ரீ சங்கர் மற்றும் பலரும் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

இவ்வாண்டு விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் ரத ஊர்வலம் சிறப்பாக நடைபெற்று முடிந்தது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்று பிறை எம்பிகேகே தலைவர் ஸ்ரீ சங்கர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles