

ஆகஸ்ட் 31 ஆம் தேதி மலேசிய தனது 68 ஆவது மெர்டேக்கா தினத்தை கொண்டாடுகிறது. மெர்டேக்கா கொண்டாட்டம் களைக்கட்டியிருக்கும் இந்த தருணத்தில் தகவல் தொடர்பு துறை அமைச்சு நாட்டு மக்களுக்கு பல இடங்களில் தேசிய கொடிகளை வழங்கி வருகிறது.
இன்று கோலாலம்பூர் மஸ்ஜித் ஜமாக் எல்ஆர்டி முனையத்தில் நடைபெற்ற தேசிய கொடிகளை வழங்கும் நிகழ்வில் தகவல் தொடர்பு துறை துணை அமைச்சர் தியோ நிக் சிங் கலந்து கொண்டார்.
செல்கோம் டிஜி நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் எல்ஆர்டி முனையத்தில் வந்திறங்கிய பொதுமக்களுக்கு துணை அமைச்சர் தியோ நிக் சிங் தேசிய கொடிகளை வழங்கி உற்சாகப்படுத்தினார்.
மலேசியர்கள் நாட்டு பற்றுடன் தங்கள் வீடுகளில் தேசிய கொடிகளை பறக்க விடும்படி அவர் கேட்டுக் கொண்டார்.

