
கோலாலம்பூர் ஆக 30-
மலேசியத் திருநாடு நாளை தனது 68 ஆம் ஆண்டு மெர்டேக்காவை கோலாகலமாக கொண்டாடுகிறது.
நாடே மெர்டேக்கா கொண்டாட்டத்தில் திளைத்திருக்கும் வேளையில் ம இகா இளைஞர் பணிப்படை ஏற்பாட்டில் இன்று மெர்டேக்கா மோட்டார் சைக்கிள் ஊர்வலத்தை கோலாகலமாக நடத்தியது.
ம இகா இளைஞர் பணிப்படை தலைவர் அண்ட்ரூ டேவிட் தலைமையில் மலூரியில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ம இகா தேசிய இளைஞர் அணி துணை தலைவர் கேசவன் மத்திய செயலவை உறுப்பினர் டத்தோ தமிழ் வாணன், டத்தோ ராஜசேகரன், பெந்தோங் மஇகா தொகுதி தலைவர் டாக்டர் ஜெயந்திரன், டத்தோ தினாளன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
செராஸ் காவல் துறை அதிகாரி இன்ஸ்பெக்டர் தோ சி ஹாவ் முக்கிய பிரமுகராக கலந்து சிறப்பித்தார்.
125 மோட்டார் சைக்கிளோட்டிகள் தங்கள் மோட்டார் சைக்கிளில் தேசிய கொடிகளை ஏந்தி தலைநகரை சுற்றி 20 கிலோமீட்டர் ஊர்வலமாக வந்தனர்.

மாலை ஐந்து மணிக்கு பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் காரசாரம் உணவகத்தின் முன் புறம் வந்தடைந்த மோட்டார் சைக்கிள் ஊர்வலத்தை ம இகா தேசிய துணை தலைவர் டத்தோஸ்ரீ எம் சரவணன் வரவேற்றார்.
பெரிய மோட்டார் சைக்கிள் மற்றும் சிரிய ரக மோட்டார் சைக்கிளோட்டிகள் இந்த ஊர்வலத்தில் பங்கேற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே பகடி வதை சம்பவத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் இன்று மஇகா பணிப்படை சார்பில் படிகவதை ஆலோசனை ஆன்லைனை அறிமுகப்படுத்தியது.
தொடர்ச்சியான பகடிவதை பாதிப்புகளை களைவதற்காக அறிமுகப்படுத்திய இந்த ஆன்லைன் சேவையால் மக்களை குறிப்பாக பகிடிவதைக்கு ஆளாகும் இளைஞர்களை காப்பற்ற முடியும் என்று அண்ட்ரூ டேவிட் கூறினார்.
24மணி நேரமும் இந்த ஆன்லை சேவை வழங்கப்படும் என்றார் அவர். தொடர்பு கொள்ள வேண்டிய எண் 017- 9090 997.

