
உலக பூப்பந்து போட்டியில் பியெர்லி தான் – தீனா ஜோடியினர் வெள்ளிப்பதக்கத்தை வென்றனர். உலக பூப்பந்து போட்டி பிரான்ஸ் பாரிசில் நடைபெற்றது.
இதன் மகளிர் இரட்டையர் பிரிவில் மலேசியாவின் பியெர்லி தான் – எம். தீனா ஜோடி சீன ஜோடியான லியு ஷெங் ஷு – டான் நிங் ஜோடியை எதிர்கொண்டது.
உலகின் முதல் நிலை வீராங்கனைகளுடன் மலேசிய போட்டியாளர்கள் வெற்றிக்காக கடுமையாக போராடினர். இறுதியில் மலேசிய ஜோடி 14-21, 22-20, 17-21 என்ற செட் கணக்கில் தோல்வியை தழுவியது.
இதன் மூலம் மலேசிய ஜோடி வெள்ளிப்பதக்கத்துடன் நாடு திரும்பியது என்பது குறிப்பிடத்தக்கது.

