செராஸ் Ketumbar hill ஸ்ரீ இரட்டை முனியாண்டி ஆலய திருவிழா விமரிசையாக நடைபெற்றது!

கோலாலம்பூர் செப் 1-
செராஸ் Ketumbar hill ஸ்ரீ இடத்தை முனியாண்டி ஆலயத்தின் வருடாந்திர திருவிழா நேற்று ஆகஸ்ட் 31 ஆம் தேதி மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

ஆலயத் தலைவர் டத்தோ ரஜினி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து சிறப்பித்தனர்.

நாட்டில் புகழ்பெற்ற Blues Brothers Welfare Association Malaysia தலைவர் சமாட், செயலாளர் டத்தோ சங்கர், ம இகா தேசிய விளையாட்டு பிரிவு தலைவர் அண்ட்ரூ டேவிட், மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் முத்தமிழ் மன்னன், செராஸ் மலூரி டேவிட், கோர்ட்டு மலை பிள்ளையார் கோவில் பூக்கடை சந்திரன் – சாந்தி தம்பதியர்உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர் .

மகேஸ்வர பூஜையைத் தொடர்ந்து பக்தர்களுக்கு சுவையான அன்னதானமும் பரிமாறப்பட்டது.

ஆலயத் தலைவர் டத்தோ ரஜினி அவர்கள் முக்கிய பிரமுகர்களுக்கு பொன்னாடை போர்த்தி மாலைகள் அணிவித்து சிறப்பு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles