உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற மலேசிய ஜோடிக்கு பிரதமர் உட்பட அமைச்சர் பாமி பட்சில் வாழ்த்து!

கோலாலம்பூர் செப் 1-
பிரான்ஸ் பாரிஸ் நகரில் நடைபெற்ற
உலக சாம்பியன்ஷிப் பூப்பந்து போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்று தேசிய கலப்பு இரட்டையர்களான சென் டாங் ஜீ – டோ ஈ வெய் நேற்று வரலாறு படைத்தனர்.

இதில் கலப்பு இரட்டையர் பிரிவில் மலேசியாவின் சென் டாங் ஜீ – டோ ஈ வெய் ஜோடி சீனாவின் ஜியாங் ஜென்பாங், வெய் யாக்சின் ஜோடியை சந்தித்தது.

இதில் முழு திறனை வெளிப்படுத்தி விளையாடிய மலேசிய ஜோடி 21-15, 21-14 சீன ஜோடியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்த வெற்றியை தொடர்ந்து மலேசியாவின் சென் டாங் ஜீ – டோ ஈ வெய் உலக பூப்பந்து போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்று வரலாறு படைத்தனர்.

இந்த வெற்றியை பெற்ற மலேசிய போட்டியாளர்களுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வாழ்த்துகளை தெரிவித்தார்.

மேலும் இது மலேசியாவிற்கு ஒரு சுதந்திர தின பரிசு என குறிப்பிட்டார்.

தகவல் தொடர்பு துறை அமைச்சர் பாமி பட்சில் தனது முகநூல் பக்கத்தில் மலேசிய ஜோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles