
சுங்கைபட்டாணி, செப்-1
யுனித்தார் பல்கலைக்கழகம் மஇகா கெடா மாநில புத்ராவுடன் இணைந்து, மலேசிய இந்திய சமூகத்திற்கான உயர்தரக் கல்வியை எளிதில் பெறுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் ரிங்.ம.10 லட்சம் மதிப்புள்ள கல்வி உதவித்தொகை திட்டத்தை அறிவித்து அதற்கான உறுதி கையொப்பமும் இட்டது.
இங்குள்ள பார்லி மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வரிய நிலையில் உள்ள இந்திய குடும்பத்தினருக்கு வாய்ப்புகளை உருவாக்குவதில் யுனித்தார் கல்லூரி அர்ப்பணிப்பையும், அனைத்து மலேசியர்களுக்குமான கல்வியை உயர்த்தும் தேசிய நோக்கத்திற்கும் இணையாக உள்ளது என சுங்கைபட்டாணி யுனித்தார் கல்லூரியின் உதவி மேலாளர் ஜீவபாலன் ஜெயராமன் கூறினார்.
இந்த உதவித்தொகை மூலம் தகுதியான இந்திய மாணவர்கள் யுனித்தாரில் பல்வேறு துறைகளில் மேற்கல்வியை தொடரும் வாய்ப்பு பெறுவார்கள் என்றார்.
“கல்வி” வாழ்க்கையை மாற்றும் சக்திவாய்ந்த கருவி என்று நாங்கள் நம்புகிறோம். இந்த ஒத்துழைப்பு, இந்திய சமூகத்திலிருந்து வரும் மேலும் பல மாணவர்கள் தங்களின் கல்வி மற்றும் தொழில் கனவுகளை நனவாக்குவதற்கான ஒரு முன்னேற்றமான படியாகும்.

மஇகா கெடா மாநில புத்ரா தலைவர் தினேஷ்குமாரன் பத்மநாதன் மற்றும் கெடா மாநில புத்ரா அமைப்பினரினரின் முயற்சிகள் அப்பாற்பட்ட இந்திய இளைஞர்களை சக்திவாய்ந்தவர்களாக்க்கும் அவர்களின் அர்பணிப்பை பிரதிபலிக்கிறது.நிதி தடைகளை நீக்கி, உலகத் தரமிக்க உயர்கல்வியை அவர்கள் பெறும் வாய்ப்பை இது வழங்குகிறது,” என்றார்.
இந்த உதவித்தொகை நிதி, கல்லூரி கட்டணங்களை உள்ளடக்கியது.
விண்ணப்பம் தொடர்பான விவரங்களை மஇகா கெடா மாநில புத்ராவுடன் இணைந்து பகிரலாம் என அவர் தெரிவித்தார்.
ரிம. 1 மில்லியன் மதிப்புள்ள இந்த கல்வி உதவித்தொகை முயற்சியுடன், யுனித்தார் மற்றும் மாநில மஇகா புத்ரா கல்வி அணுகலை வலுப்படுத்தும், சமூக முன்னேற்றத்தை ஊக்குவிக்கும், மேலும் அடுத்த தலைமுறை இந்தியத் தலைவர்களை உருவாக்கும் தங்களது கூட்டு இலட்சியத்தை மறுபடியும் உறுதி செய்வதாக அவர் உறுதியுடன் கூறினார்.