
கோலாலம்பூர் செப் 2-
பொறுப்பற்ற அறிக்கைகளினால் இனங்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தும் மற்றும் பாதிப்பை கொண்டு வரும் என்று பேரா பாஸ் இளைஞர் அணி தலைவருக்கு சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பாராயுடு அறிவுறுத்தி உள்ளார்.
சமூக ஊடகங்களில் எந்தவொரு அறிக்கைகளையும் வெளியிடுவதற்கு முன் பாஸ் இளைஞர் துணைத் தலைவர் முகமட் ஹபீஸ் சப்ரி சிந்திக்க வேண்டும்.
ஒரு சட்டமன்ற உறுப்பினரான முகமட் ஹபீஸ் அனைவருக்கும் ஒரு நல்ல முன்மாதிரியாக இருக்க வேண்டும்.
மேலும் பொறுப்பற்ற முறையில் அறிக்கைகளை வெளியிடுவது மக்களை தவறாக வழிநடத்துவதும்.
குறிப்பாக இனங்களுக்கிடையில் வெறுப்பையும் ஏற்படுத்தும்.
ஒரு சம்பவத்தில் இனக் காரணங்களுடன் இணைப்பது நியாயமற்றது. மேலும் அது ஆபத்தானது.
ஏனெனில் அது ஒரு இனத்தைச் சேர்ந்த அனைத்து மக்களையும் தவறாகப் புரிந்து கொள்ளப்படலாம்.
இந்த சம்பவம் சில தனிநபர்களை மட்டுமே உள்ளடக்கியது என்று பாப்பாராயுடு கூறினார்.
அரசியல் நலன்களுக்காக, 68 ஆண்டுகளாக நாம் பாதுகாத்து வந்த மக்களின் ஒற்றுமையை பாழாக்க வேண்டாம் என்று அவர் இன்று ஓர்அறிக்கையில் தெரிவித்தார்.
முன்னதாக நேற்று முகமது ஹபீஸ் பதிவேற்றிய ஒரு பதிவில் ஈப்போவில் சுதந்திர தின விழாவில் பேரா சுல்தான், சுல்தான் நஸ்ரின் ஷாவை அணுகிய ஒரு பெண்ணை, சீனப் பெண் என தொடர்புபடுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.