வீரப்போராட்டத்தில் தோல்வியடைந்தாலும் பெர்லி தான்-தீனா ஜோடி மலேசியாவின் தேவதைகளே!

கோலாலம்பூர் செப் 2-
பாரிஸ் நகரில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வீர போராட்டத்தில் சீனாவிடம் தோல்வியடைந்தாலும் பெர்லி தான்-தீனா ஜோடி மலேசியாவின் தேவதைகளே என்று புகழாரம் சூடப்பட்டுள்ளது.

மலேசியாவின் பெண்கள் இரட்டையர் நட்சத்திரங்கள் பெர்லி தான்-எம்.தீனா இரட்டையர் பாரிஸில் நடந்த உலக சாம்பியன்ஷிப் 2025 இறுதிப் போட்டியில் தைரியமாக போராடினார்கள்.

ஆனால் 21-14, 20-22, 21-17 என்ற செட் கணக்கில் சீனாவின் லியு ஷெங்ஷு மற்றும் டான் நிங் ஆகியோரிடம் தோல்வியடைந்தனர்.

தோல்வி என்பது வேதனையே ! என்ற போதிலும், உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இறுதிப் போட்டிக்கு இம்முறை நாடு முன்னேறியிருப்பது ஒரு சாதனையே.

2023 ஆம் ஆண்டில் காலிறுதி மட்டுமே முன்னேறியதை விட, இது சிறப்பானது.

பதக்கமே வெள்ளாத போட்டியில் ஒரு வெள்ளிப் பதக்கத்தையாவது நாட்டுக்கு பெற்றவர்களை கொண்டாடுவதும் அவர்களுக்கு ஊக்கமளிப்பதும் நமது விளையாட்டாளர்களுக்கு உற்சாகமளிக்கும் செயலாக மலேசியர்கள் கருதுகிறார்கள்.

உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் மலேசிய மகளிர் இரட்டையர் ஜோடியாகவும் அவர்கள் வரலாறு படைத்தனர்.

நன்றி – மெடியா சிலாங்கூர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles