ராயல் என்ஃபீல்டு பிரதர்ஸ் மோட்டார் கிளப்பின் முதல் ஆண்டு விழா! சிறப்பு விருந்தினராக தேசிய மஇகா இளைஞர் பிரிவின் துணை தலைவர் கே.கேசவன் கலந்து கொண்டார்!

கோலாலம்பூர், செப்.4-
ராயல் என்ஃபீல்டு பிரதஸின் மோட்டார் கிளப்பின் முதல் ஆண்டு நிறைவு விழா மிக சிறப்பான வகையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக தேசிய மஇகாவின் இளைஞர் பிரிவு துணை தலைவர் மற்றும் லெம்பா பந்தாய் தொகுதி மஇகா இளைஞர் தலைவர் கே.கேசவன் அவர்கள் கலந்துக் கொண்டார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், ராயல் என்ஃபீல்டு பிரதஸ் மோட்டார் கிளப்பின் உறுப்பினர்கள் கடந்த ஒரு ஆண்டில் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் செயல்பாடுகளை வெற்றிகரமாக நடத்தியுள்ளனர்.

அந்த வகையில் தங்களின் குடும்பத்தினரின் உறுதுணையுடன் உண்மையான சகோதர, சகோதரிகளாக இணைந்து இந்த மோட்டார் கிளர்ப்பில் செயல்படுவது பெருமைக்குரிய விசயமாக தாம் கருதுவதாக கேசவன் தெரிவித்தார்.

மேலும், இந்தக் குழுவில் இளைஞர்கள் மற்றும் புதுமுகங்கள் அதிகம் இணைவது, அவர்கள் வாழ்க்கையில் புதிய அனுபவங்களை அறிந்து கொள்ளவும் தங்கள் திறமைகளை வெளிக்கொணரவும் ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இது போன்ற நடவடிக்கைகளில் இளைஞர்கள் ஈடுபடுவதன் மூலம் அவர்களின் வாழ்க்கை முறையை ஒரு சிறந்த திசைக்கு கொண்டு செல்ல முடியும் என கூறிய அவர், இவ்விழாவில் கலந்து கொண்டதில் தாம் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாகவும், RE Brothers குழுவினரின் அன்பான அழைப்புக்கு நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles