500 இந்திய மாணவர்கள் சீனாவில் தொழில் திறன் கல்வியை பயில மித்ரா பேருதவி – பிரபாகரன் அறிவிப்பு

கோலாலம்பூர் செப் 4-
சீனாவில் தீவேட் எனப்படும் தொழில் திறன் கல்வியை பயில 500 இந்திய மாணவர்களுக்கு மித்ரா உதவி புரிகிறது என்று மித்ரா தலைவர் பிரபாகரன் தெரிவித்தார்.

சீனாவுக்கு சென்று வர விமான டிக்கெட் முதல் அவர்கள் தீவேட் கல்வியை பயின்று வர அனைத்து செலவுகளையும் மித்ரா ஏற்றுக் கொள்கிறது என்று அவர் சொன்னார்.

சீனாவுக்கு சென்று தொழில் திறன் கல்வியை பயின்று பத்திரமாக நாடு திரும்புங்கள் என்று அவர் இந்திய மாணவர்களை கேட்டுக் கொண்டார்.

மடானி அரசாங்கம் இந்திய சமுதாய மாணவர்களுக்கு வழங்கிய இந்த வாய்ப்பை நமது மாணவர்கள் நல்ல முறையில் பயன் படுத்தி கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

இன்று கோலாலம்பூர் பண்டார் துன் ரசாக் அனைத்துலக இளைஞர் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டபோது அவர் இதனை தெரிவித்தார்.

மித்ராவின் மலேசிய – சீனா இடையே தீவேட் தொழில் திறன் பயிற்சி திட்ட நிகழ்வு இன்று மிகப்பெரிய அளவில் நடைபெற்றது.

துணை பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles