பொது வசதிகளை மேம்படுத்துவதற்காக RM281.9 மில்லியன் ஒதுக்கீடு!

கோலாலம்பூர், செப் 8 – நாடு முழுவதும் பொது வசதிகளை மேம்படுத்துவதற்காக 2024 முதல் இந்த ஆண்டு ஜூலை 31 வரை RM281.9 மில்லியன் ஒதுக்கீட்டை வீட்டுவசதி மற்றும் உள்ளாட்சி அமைச்சகம் (KPKT) அங்கீகரித்துள்ளது.

பொது கழிப்பறைகள், பல்நோக்கு மண்டபங்கள், பொழுதுபோக்கு வசதிகளின் பராமரிப்பு மற்றும் மேம்பாடு ஆகியவை உட்பட 1,730 திட்டங்கள் ஒதுக்கீட்டில் அடங்கும் என்று அதன் அமைச்சர் ஙகா கோர் மிங் கூறினார்.

“உள்ளூர் அரசாங்கத் துறை மூலம், நாடு முழுவதும் உள்ள 156 பிபிடிகளுக்கு BP.1 மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சிறிய அளவிலான திட்டங்களுக்கு KPKT நிதியுதவி வழங்கியுள்ளது.

“இந்த ஒதுக்கீடு அவற்றின் பயன்பாடுகளை அடிப்படையாகக் கொண்டது மற்றும் உள்கட்டமைப்பு, பொது வசதிகள், சமூகப் பொருளாதாரம், பாதுகாப்பு என நான்கு நோக்கங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது,” என்று அவர் நாடாளுமன்றத்தில் கூறினார்.

தேசிய பொது இடங்களை மறுசீரமைப்பு செய்யும் முயற்சிகளில் சீர்திருத்தத்திற்கான இலக்குகள், குறிப்பாக பொது பூங்காக்கள் மற்றும் பொழுதுபோக்கு வசதிகளைப் பராமரிப்பதில் செனட்டர் டத்தோ முஸ்தபா மூசாவின் கேள்விக்கு ஙா பதிலளித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles