சிம்பாங் லீமா இடுகாட்டில் கல்லறைத் துப்புரவுப் பணி!

சிலாங்கூர் மாநில இந்திய சமூக நலன் மரண சகாய இயக்கத்தின் (காயிஸ்) ஏற்பாட்டில் 11 அம் ஆண்டு கல்லறை விழா 05.10.2025 ஞாயிறு காலை 8.00 மணிக்கு கிள்ளான் சிம்பாங் லீமா இடுகாட்டில் நடைபெறும்.

இதனை முன்னிட்டு எதிர்வரும் 28.09.2025, ஞாயிறு காலை 8.00 மணிக்கு சிம்பாங் லீமா இடுகாட்டில் கல்லறைத் துப்புரவுப் பணி நடைபெறும். பொதுமக்கள் அனைவரும் இவ்விழாவில் கலந்து சிறப்பித்து இயன்ற ஒத்துழைப்பை நல்க அன்புடன் அழைக்கப் படுகிறார்கள்.

நம்மை விட்டு மறைந்த ஆத்மாக்களின் உடல்கள் அடங்கியுள்ள கல்லறையைத் தூய்மையாக வைத்திருப்பது அவர்களுக்கு நாம் செய்யும் ஒரு மரியாதை ஆகும். இது போன்ற சேவைகள் நாடெங்கும் நடைபெற வேண்டும் என டத்தோ ஸ்ரீ டாக்டர் தட்சிணாமூர்த்தி கேட்டுக் கொண்டார்.

நன்கொடை அளிக்க விரும்பும் எவரும் கணக்கு எண் BSN 10104-41-00010411-1 க்கு நன்கொடை அளிக்கலாம். மேல்விவரங்களுக்கு இயக்கத்தின் தலைவர் டத்தோ ஸ்ரீ தட்சிணாமூர்த்தி அவர்களை 012-6700762 எனும் எண்ணில் அழைக்கலாம். விழாவின் தலைவர், டத்தோ ராமா +60133104269, uh
செயலாளர் காயிஸ் டாக்டர் சுப்பையா 016-3233214

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles