பெர்செக்குத்து தேசிய ஆண்டு பொதுக்கூட்டம் ! ஜொகூர் மாநிலத்தின் முக்கிய பங்கு – பூபாலன்

பெர்செக்குத்து தேசிய ஆண்டு பொதுக்கூட்டத்தில் (AGM) ஜொகூர் மாநிலத்தை பிரதிநிதித்துவப்படுத்தி உரையாற்றிய ஜொகூர் மாநில பெர்செக்குத்து துணைத் தலைவர் பூபாலன் பொன்னுசாமி, ஜொகூரின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

“ஜொகூர் என்பது தொழில், இளைஞர்கள் மற்றும் பல இன மக்களால் நிரம்பிய மாநிலம். இங்கு பெர்செக்குத்துவின் ஆதரவை வலுப்படுத்த முடிந்தால், அது தேசிய அளவில் வெற்றியைத் தீர்மானிக்கும் அடித்தளமாக இருக்கும்,” என்று அவர் தெரிவித்தார்.

பூபாலன் பொன்னுசாமி, பெர்செக்குத்து தலைவர் தான்ஸ்ரீ முஹியிதீன் யாசின், துணைத் தலைவர் ஹம்சா ஸைனுடின் மற்றும் பொதுச் செயலாளர் அஸ்மின் அலி ஆகியோரின் தலைமைக்கு நன்றி தெரிவித்தார்.

மேலும், ஜொகூர் மாநில பொது புகார் பிரிவை தலைமை தாங்கும் திரு .லிம் அவர்களின் பங்களிப்பையும் சிறப்பாகக் குறிப்பிடினார். “மக்களின் பிரச்சனைகளை அடிப்படையில் சென்று தீர்க்கும் முயற்சிகள் மூலம் நம்பிக்கையை உருவாக்க முடிந்துள்ளது. மக்கள் பார்கிறார்கள், மதிப்பிடுகிறார்கள், ஆதரிக்கிறார்கள்,” என்றார்.

இளைஞர்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், வேலைவாய்ப்பு, வாழ்க்கைச் செலவு, வீடுகள் மற்றும் தொழில் வாய்ப்புகள் போன்ற சவால்களுக்கு தீர்வுகளை பெர்செக்குத்து முன்வைக்க வேண்டும் என்றார். “புதிய தலைமுறையின் குரல் அரசின் உச்ச நிலைக்கு செல்ல பெர்செக்குத்து ஒரு உண்மையான தளம் என்பதை நாம் நிரூபிக்க வேண்டும்,” என்று தெரிவித்துள்ளார்.

அவர் மேலும், டிஜிட்டல் ஊடகங்களில் தாக்கத்தை அதிகரிக்க வேண்டிய அவசியத்தை எடுத்துக்காட்டினார். “இளைஞர்கள் இன்று கட்சிகளை வெறும் மேடைகளில் அல்லாமல், சமூக ஊடகங்கள் வழியாக மதிப்பிடுகிறார்கள். எனவே, எங்கள் தகவல் தொடர்பு பாணி வேகமாகவும், தெளிவாகவும் இருக்க வேண்டும்,” என்றார்.

உரையை நிறைவு செய்த அவர், “பெர்செக்குத்து என்பது பெர்சாத்துவின் துணை அணி மட்டுமல்ல, வெற்றியை உறுதி செய்யும் இயக்க சக்தியாகும்,” என்று வலியுறுத்தினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles